பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை394

நக்கீரர் பிற்காலத்தவர். இத்திருமுருகாற்றுப்படை செய்த நக்கீரர் முற்காலத்தவர். இவர், ‘முருகன் திருமேனி இயற்கையாகவே தெய்வ மணங் கமழ்வது’ என உண்மையைக் கூறினார். இவ்வாறு அன்றி, ‘பிடிவாதம் பேசிய நக்கீரரே பின்பு திருந்திக் கயிலை யாத்திரை செய்யும் வழியில் திருமுருகாற்றுப் படையை இயற்றினார்’ என்றலும் உண்டு.)

அடி-297, 298: அறிவல் நின் வரவு; அஞ்சல் ஓம்பு என அன்புடை நன்மொழி அளைஇ - (நின்னை நோக்கி, புலவனே!) ‘நின் வரவு இன்னது பற்றியது’ என்பதனை யான் முன்பே அறிவேன்; அது நினக்குக் கிடைக்குங்கொல், கிடையாதுகொல் என அஞ்சுதலை இனி நீ ஒழிவாயாக’ என இவ்வாறான அன்புடைய நல்ல மொழிகளை, உனக்கு வீடுபேற்றை வழங்கும் மொழியோடு கலந்து கூறிப் பின், (‘கூறி’ என்பது சொல்லெச்சம்

அடி-299,300,298: இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து நீ ஒருவன் ஆகி விளிவின்று தோன்ற - இருளின் நிறம் போலும் நிறத்தையுடைய கடல் நீரால் சூழப்பட்ட நிலவுலகத்தில், வீடு பெற்றமையால் நின்னோடு, ஒப்பார் பிறர் இன்றி நீ ஒருவனுமேயாய் இறப்பின்றித் தோன்றும்படி. (‘நீ ஒருவன்’ என்பது பின் முன்னாக மாறி நின்றது. இறப்பாவது, சூக்கும தேகம் நிற்கத் தூல தேகம் மாத்திரையே நீங்குவது. வீடெய்துவார்க்குச் சூக்கும தேகமும் தூல தேகத்தோடு ஒரு சேர நீங்குமாகலின் முன்னர்க் கூறிய இறப்பு எய்தாமையை “விளிவின்று” என்றும், அவர் அத்தன்மையராதல் தேகம் உள்ள பொழுதே நிகழும் சில நிகழ்ச்சிகளால் வெளிப்படுதல் பற்றி, ‘நீ ஒருவனுமேயாகித் தோன்ற’ என்றும் கூறினார்.

அடி-301,300: பெறலரு விழுமிய பரிசில் நல்கும் - (நீ கருதிய,) பலர் பெறுதற்கரிய சீரிய பரிசிலை, (அஃதாவது வீடு பேற்றினை) உனக்கு நல்கியருளுவன். (‘மதி’ என்னும் முன்னிலை யசை. இங்குப் படர்க்கைக் கண் வந்தது.)

அடி-321,322: சேண் நின்று இழும் என இழிதரும் அருவி - உச்சியினின்றும் ‘இழும்’ என்னும் ஒசை தோன்ற வீழ்கின்ற அருவிகளையுடைய (சோலை மலை.)

அடி-302,301: பல் வேறு பல உடன் துகிலின் நுடங்கி - வகை பலவாய் வேறுபட்டன பல சேர்ந்த துகிற் கொடிகள் அசைவன போல அசைந்து. (“உடன்” என்பதன் பின் ‘ஆய’ என்பது வருவிக்க.) அகில் சுமந்து - அகிற் கட்டைகளை மேலே கொண்டு.

அடி-303: ஆர முதல் முழுது உருட்டி - சந்தன மரமாகிய முதலினை முழுதாக உருட்டிக் கொண்டு.

அடி-303, 304: வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - குறு மூங்கில்களின் பூவை யுடைய முனைகள் வளர்க்கும்