பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை398

வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்
இரவும் பகலும் இகழா முயற்றியொடும்
அடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
15.பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத்

தொல்லுயிர் கொல்லுந் தொழிலே, வடிவே
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி

20.அயிற்கோட் டேனம் எடுத்தெழு குறங்கு

செயப்படுபொருள் வினை முதல்போலக் கூறப்பட்டனவாம். தீவகம் - பார்வை மிருகம். சிலை - வில்.

அடி-7, 10: ‘உறைவது வெள்ளிடை’ என்க. வெள்ளிடை - வெளியான இடம்; பொத்தற் குடிசை, “உறைவது” என்பது, அதற்குரிய இடத்தின்மேல் நின்றது.

அடி-8: பயிலல் - பலவிடத்து இருத்தல். குடம் - கட்குடம். பல நிறைத்து - பலவற்றால் நிறைக்கப்பட்டு.

அடி-9: கறை - இரத்தம். கலந்த - பொருந்திய. ‘பயின்று, நிறைத்து, கலந்த வெள்ளிடை’ என்க.

அடி-10: பீலி - மயில் இறகு. மேய்ந்து - வேயப்பட்டு ‘பின்பு அவை பிரிந்துபோன வெள்ளிடை’ என்க.

அடி-11: ”மறைப்ப” என்றது, ‘அற்றம் மறைப்ப’ என்றபடி. எனவே, ‘புலித்தோலே உடை’ என்றதாம். வாலிய - தூய. (அதன்மேல் மாசுபடியாது’ என்பதாம். “வார்” என்பது ஆகுபெயராய், வலையைக் குறித்தது.

அடி-11, 12: ‘வாரினை இகழாது, இரவும், பகலும் முயலும் முயற்றி’ என்க. முயற்றி - முயற்சி.

அடி-13: அடைத்த - மூங்கிற் குழாய் முதலியவற்றில் நிறைத்த. “அடைத் தேனும்” என்றார் பின்னும். ‘தேன் அடைத்தலும்’ என்பதே கருத்தென்க.

அடி-14: சுரிகை - உடைவாள்.

அடி-15: கிளை, விலங்குகளின் சுற்றம். ‘கிளையாகிய அவை’ என்க. ‘அவற்றொடும்’ என்பதில் சாரியை தொகுக்கப்பட்டது. படுத்து - வீழ்த்து.