பக்கம் எண் :

399திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்(து)
அடுபடை பிரியாக் கொடுவிற லதுவே, மனமே
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
25.அகப்படு துயருக் ககனமர்ந் ததுவே, இதுவக்

அடி-16: தொன்மறைக் காட்டில் வாழும் வாழ்வு பற்றிக் கூறப்பட்டது. ‘தேன் அடைத்தலும், கொல்லலும் தொழிலே’ என்க. ‘கொல்லுக தொழிலே’ என்பது பாடம் அன்று. “வடிவே” என்னும் பிரிநிலை. ஏகாரம், எழுவாய்ப் பொருள் தோற்றி நின்றது.

அடி-17, 21: முன்கை முதலிய சினைகளையே ‘வடிவு’ என்னும் முதலாக உபசரித்துக் கூறினார். அவையும் அவ்வாறு கூறற்கு இயைபுடைமை பற்றி. மறம் - வீரம். ‘கடித்த முன்கை, திரள் முன்கை’ என்க. படை - படைக்கலம். அவை வெட்சிக் காலத்தில் கரந்தையார் விடுத்தனவும். கரந்தைக் காலத்தில் வெட்சியார் விடுத்தனவுமாம். இவற்றைக் கண்ணப்பர் அறியார் ஆயினும் இனம் குறித்தற்கு இவற்றைக் கூறினார். திண் வரை அகலம் - தெளிவாக ஆழ்ந்து விளங்கும் கீற்றுக் களையுடைய மார்பு. எயிற்று - எயிற்றால். எண்கு - கரடி. கவர்ந்த - கடிந்த. இரு - பெரிய. தண்மை, வெயர்வையால் வந்தது. அன்ன - அந்தக் கரடிகளே, அயில் கோட்டு - கூர்மையான பற்களால், எடுத்து எழு குறங்கு - குத்தி யெடுத்த துடை. செடித்து எழு குஞ்சி - செடிகளின் தன்மையை உடையனவாய். (அடர்ந்து, குறுகி) வளர்ந்த தலைமயிர். ‘செந் நிறத்தை உறு கண்’ என்க. ஐயுருபு சாரியை நிற்கத்தான் தொகுத்தலை இலேசினால் கொள்க.1

அடி-22: கடுத்து - சினந்து. ‘கரு நிற அவ்வாய்’ - என்னும் இரண்டாவதன் தொகை பின் முன்னாக மாறி நின்றது. ‘உரையையுடைய அந்த வாய்’ என்க.

அடி-23: அடு படை - கொல்லும் படைஞர். பிரியா விறல் - பிரிந்து போகாமைக்கு ஏதுவான விறற் சொல். விறல் - வெற்றி. அஃது ஆகுபெயராய் அதனையுடைய சொல்லைக் குறித்தது. விறலது - விறலை யுடையது. ‘அவ்வாய் விறலது’ என்க. இங்ஙனமாயினும் விறலதுவாகிய வாய்’ என்றதே. இதுகாறும் வடிவே கூறப்பட்டது. கருத்து, இவற்றால் எஞ்ஞான்றும் வேட்டையே தொழிலாய் ஈடுபடுதல் குறிக்கப்பட்டது. இதன்பின் ‘ஆகியன’ என்பது வருவிக்க.

அடி-23, 24, 25: அகப்படுதுயர் - அகப்படுதலால் உண்டாகும் துன்பம், அகன் அமர்தல் - உள்ளுற விரும்புதல். அமர்ந்தது -


1. தொல் - எழுத்து - தொகை மரபு - 15.