பக்கம் எண் :

405திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

கனவில் ஆதரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
95.நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக

ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
புரிவொடு பூசனை செய்யும்
குணிசிலை வேடன் குணமவை ஆவன

100.உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்;

பூசைசெய்து போன பின்பும். ‘இவ்வாறு செய்தவன் யாவன்’ என அறிவாராய்ச் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்த்தவர் கண்ணப்பர் வருகையைக் கண்டு நடுங்கிப் பின் அவர் செய்தவற்றை யெல்லாம் பார்த்துவிட்டுத் தம் இடத்திற்குச் சென்று விட்டார். செல்லும் முன் பவித்திர பூசையைச் செய்து செய்ய வேண்டுவது தம் கடமை “எனக் கொண்டு அவ்வாறு சென்றார் என்பது பின்பு அவர், “நாள் தொறும் நான்செய் பூசனை தன்னை” எனக் கூறினமையால் விளங்கும். “போயின வண்ணம்” என்பதன்பின் ‘கண்டு’ என ஒருசொல் வருவிக்க. ‘ஈங்கொரு வேடுவன்’ என்பது முதல் “இட்டுப்போம் அது” என்பது முடிய உள்ளவை சிவகோசியார் கண்ணப்பர் செய்தவைகளை யெல்லாம் ஊகித்தறிந்து இறைவன்பால் எடுத்துக் கூறி முறையிட்டுக் கொண்டது. ‘உனக்கு அழகா இவை?’ என்க. “என்றும்” என்பதற்கு, ‘என்றாயினும்’ என உரைக்க. ‘இவ்வாறான செயல் என்றாயினும் உனக்கு இனிதாகுமோ’ என்றபடி. “இனிதே” என்னும் ஏகாரம் வினாப் பொருட்டு. ‘என் உன் திருக்குறிப்பு’ என்க. ‘என்னுந் திருக்குறிப்பு’ என்பது பாடம் அன்று, “என்று அவன் சென்ற” என்ற அநுவாதத்தால், ‘என்று முறையிட்டுவிட்டு அவன் சென்றான்’ என்பது பெறப்பட்டது.

அடி-90 - 116: அல் - இரவு. ‘அந்தணன் தனக்குக் கனவில்’ என்க. “பிறை யணி” என்பது முதல், “மருங்கின்” என்பது முடிய உள்ள பகுதி இறைவன் திருவுரு வருணனை “முடி மிடற்றுக் கை நாட்டத்து ஆக விடை மருங்கு” என்பது பலபெயர் உம்மைத் தொகையாய் ஒரு சொல் நீர்மைப்பட்டு, “திருவுரு” என்பதனோடு இரண்டாவதன் உருவும் பயனும் உடன் தொக்க தொகையாகத் தொக்கன. இரண்டாவதன் பெயர்த் தொகையாகலின், சிலவிடத்துச் சாரியைகளையும் பெற்றது. ஆகம் - மார்பு. அஃது உம்மைத் தொகை