| அவனுகந் தியங்கிய இடம்முனி வனமதுவே; அவன் செருப்படி யாவன விருப்புறு துவலே; எழிலவன் வாயது தூயபொற் குடமே; அதனில் தங்குநீர் கங்கையின் புனலே; | 105. | புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே; அதற்கிடு தூமலர் அவனது நாவே; உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப் புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே; அவன்தலை தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த | 110. | அங்குலி கற்பகத் தலரே; அவனுகந்(து) இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர் இட்ட நெய்பால் அவியே; இதுவெனக் குனக்கவன் கலந்ததோர் அன்பு காட்டவன்; நாளை | 115. | நலந்திகழ் அருச்சனை செய்தாங்(கு) இருவென்று இறையவன் எழுந் தருளினன் அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து மனமிகக் கூசி வைகறைக் குளித்துத் தான்முன் செய்வதோர் | 120. | பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து |
நிலைப் புணர்ச்சியில் மகர ஈறு கெட்டு நின்றது. “உமையொடு” என்பதில், கூடிய என ஒருசொல் வருவிக்க. மருங்கு - பக்கம். “காட்டியருளி” என்பது ஒருசொல். புரிவு -விருப்பம்; கருணை ‘குணம்’ என அடையின்றிக் கூறியவழி அது நற்குணத்தையே குறிக்கும். அஃது இங்கு ஆகுபெயராய் அதனால் விளைந்த சிறப்புக்களைக் குறித்தது. ‘அவன் வேடன் அல்லன்; மா தவன்’ என்க. முனி வனம் - முனிவனுக்கு உரித்தாயவனம். அது, பகுதிப் பொருள் விகுதி. துவல் - தளிர். புனற்கு - புனற்கண்; உருபு மயக்கம். மா மணி - உயர்ந்த இரத்தினங்கள். அதற்கு - புனற்கு. “உப்புனல்” என்பதில் உகரச் சுட்டு மேலிடம் பற்றி வந்தது. உறிஞ்சுதல் - உராய்தல், ‘உரிநுதல்’ என்றல் பழைய வழக்கு. புன் மயிர் - கீழ்மையை யுடைய மயிர். குசை - தருப்பை. வழிபாட்டினை ஏற்பவற்றில் சிறப்புடையன திருவடிகளே யாதலின், “நம் அடிக்கு” என அவற்றையே கூறினார். தருப்பையின் பொதிந்த - தருப்பையால் நிரம்பிய. ‘செய்யப்பட்டு முடிந்த’ என்றபடி. அங்குலி - மோதிரம்; பவித்திரம். ‘பவித்திரத்தோடு
|