பக்கம் எண் :

407திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

பொருந்த எடுத்துத் தூவப்பட்ட அலர்; மலர்’ என்க. நல் மாதவர் - சைவ முனிவர். அவர் செய்யும் வேள்வியில் அவிசாய் அமைவன நெய், பால், தயிர் அல்லது ஊனாகாமை பற்றி. “நல் மா தவர் இட்ட அவி ஊன் அவையே” என்னாது, “நெய் பால் அவியே” - என்றார். “இது” என்றது, கூறப்பட்ட அனைத்தையும் தொகுத்து. ‘இந்நிலைமை’ என்றவாறு. ‘எனக்கு இந்நிலைமை’ என இறைவன் கூறியதனால், ‘ஏனையோர் பலர்க்கும் அவையெல்லாம் மிக இழிந்தனவாம்’ என்றதாயிற்று. எனவே, ‘அன்போடு கூடிய வழி எவையும் பூசையாம்’ என்பதும், ‘அன்போடு கூடாதவழி எதுவும் பூசையாகாது’ என்பதும் கூறப்பட்டனவாம். இவை பற்றியே.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும் கண்டு
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே1

உள்ளம் உள்கலந் தேத்தவல் லார்க்கலால்
கள்ளம் உள்ளவ ருக்கருள் வான்அலன்;
வெள்ள மும்அர வும்விர வும்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே2

யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்3
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்4

அன்பேஎன் அன்பேஎன்று அன்பால் அழுதரற்றி
அன்பே அன்பாக அறவழியும் - அன்பன்றித்
தீர்த்தம், தியானம், சிவார்ச்சனைகள் செய்வனவும்
சாத்தும் பழமன்றே தான்5

என்றாற்போலும் தோத்திர சாத்திரங்கள் எழுந்தன. இவ்வாற் றால் கண்ணப்பர் இட்ட பொருள்கள் பொருளால் இழிந் தனவே யாயினும் அவரது அன்பாகிய தகுதியால் அவை திவ்வியப் பொருள்கள் தரும் இனிமையை இறைவற்குத் தந்தன. இதனானே அன்பின்றி யிடுவன திவ்வியமேயாயினும் இறைவற்கு அவை மிக


1. திருமுறை - 5.90.9
2. திருமுறை - 5.83.4.
3. திருவாசகம் - சென்னிப் பத்து
4. திருக்களிற்றுப்படியார் - 15.
5. மேற்படி - 55.