| தோன்றா வண்ணம் இருந்தன னாக, இரவியும் வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக் கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத் | 125. | தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன் திருமேனியின் மூன்று கண்ணாய் ஆங்கொரு கண்ணிலும் உதிரம் ஒழியா தொழுக இருந்தன னாகப் | 130. | பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக் கையில் ஊனொடு கணைசிலை சிந்த நிலம்படப் புரண்டு நெடிதினில் தேறிச் சிலைக்கொடும் படைகடி தெடுத்(து)இது படுத்தவர் | 135. | அடுத்தவிவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு |
இழிந்தனவேயாய் வெறுப்பைத் தருதல் பெறப்படும். இம்முறை உலகியலிலும் உள ஆதலை நினைக. அடி-117, 121: இப்பகுதி கனவு கண்ட பின் சிவகோசரியார் செய்தவற்றைக் கூறியது. கூசியது, தாம் உண்மையறியாது வெறுத்ததை நினைந்து. “குளித்து” என்றது உபலக்கணம் ஆதலின், ‘பிற கடன்களை முடித்து’ என்பதும் கொள்க. இதன் பின் ‘சென்று’ என ஒருசொல் வருவிக்க. அடி-121, 125: இப்பகுதி கண்ணப்பர் காளத்தியப்பர்பால் வந்த நிலைமையைக் கூறியது. “இரவி அழல் சிந்த” என்றது, உச்சிப்போது ஆயினமையைக் குறித்தது. தடிந்த உடும்பு - கொல்லப்பட்ட உடும்பு. அது பாகமாக்கப்படவில்லை. இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப் பட்டது. அடி-125, 129: “தான்” என்பதை ஒழித்து ஓதுவதும், ஒரு கண்ணிலும் உம்மை சேர்த்து ஓதுவதும் பாடங்கள் அல்ல. அடி-130 - 147: இப்பகுதி இறைவன் கண்ணப்பரது அன்பைச் சிவகோசரியார்க்குக் காட்டுதற் பொருட்டுச் செய்ததையும், அதனால் கண்ணப்பர்பால் நிகழ்ந்த அருஞ் செயல்களையும் கூறியது. நெக்கு நெக்கு இழிதல் - தடைகளைக் கடந்து கடந்து ஒழுகுதல். கனற்றி - துயரத்தால் மனம் புழுங்கி அரற்றி. இத்தனை தரிக்கிலன் - இவ்வளவு பெருந் துன்பத்தைக் காண இனி நான் பொறேன், “அப்பியும்”
|