பக்கம் எண் :

409திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

 இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிறிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக்(கு) அடுத்ததென் அத்தனுக்(கு) அடுத்ததென் என்(று)
140.அன்பொடுங் கனற்றி

இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி

145.அணைதர அப்பினன் அப்பலுங் குருதி

நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்(று)

150.இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்

தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித்(து)
அருளினன் அருளலும்
விண்மிசை வானவர்

155.மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்

என்னும் உம்மை, இதுவே இப்பொழுது இதற்கு இதுவே முடிவான மருந்து’ என்று எண்ணியதையும், “காண்பன்” என்றது ‘செய்து பார்ப்போம்; பின்பு ஆகட்டும்’ என்று துணிவு கொண்டதையும் குறித்தன. ஐயமாயவழியும் செய்யத் துணிந்தது, அவரது அளவிலா ஆர்வத்தைக் காட்டுகின்றது. நிற்பது ஒத்து - நிற்பது போன்று. என்றது, ‘கண்ணை அப்பியதனால் குருதி நிற்க வில்லை; ஒழுகவிட்ட குருதியை இதனை அடுத்து ‘நாயனார் நமது மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தார்’ எனக் கூறியதனால், ‘இறைவன் குருதி நின்ற கண் நிற்க. தனது மற்றைக் கண்ணில் குருதியை ஒழுக விட்டான்’ என்பது உய்த்துணர வைக்கப்பட்டதாம். அங்ஙனம் அல்லாக்கால் முன்பு, “ஆங்கு ஒருகண் உதிரம் ஒழுக நின்றனன்” என்றது பழுதாம் ஆகலின்.

அடி-148 - 158: இவ் இறுதிப் பகுதி இறைவன் கண்ணப் பரது அரிய செயலை ஆற்றமாட்டாது விரைந்து அவருக்கு அருள் புரிந்தமையைக் கூறியது. அன்புடைத் தோன்றல் - அன்பராயினார்