| முடுகு நாறு குடிலை யாக்கையன், வேங்கை வென்று வாகை சூடிய சங்கரன் றன்இனத் தலைவன் ஓங்கிய வில்லும்,அம்பும் நல்லன ஏந்தி | | 15 | ஏற்றுக்கல்வனம் காற்றில்இயங்கி, |
அடி-7: உழுவைக் கூன் உகிர் -புலியினது வளைந்த நகம். கேழல் வெண் மருப்பு - பன்றியின் வெள்ளிய கொம்பு (பல்).இவைகளைத் தொடுத்த மாலை' என்க. அடி-8: மாறு படத் தொடுத்தல் -ஒன்றை யிடையிட்டு மற்றொன்றைத் தொடுத்தல்.'மாலையோடு உத்தரியத்தை யுடையவன்' என்க;உத்தரியம் - மேலாடை 'அது புலித் தோல்' என்பது,மேல், "உழுவைக் கூன் உகிர்" என்ற குறிப்பாற்பெறப் பட்டது. அடி-10: கானக் குஞ்சி - காடுபோன்றதலை மயிர். கவடி - பலகறை; அஃது அவை பல கோத்தமாலை. புல்லினன் - பொருந்தியவன். அடி-11: முடுகு - முடை நாற்றம்; "முடுகுநாறிய வடுகர்"1 என்றார் சுந்தரரும். குடிலம் -வளைவு. குடிலை - வளைந் துள்ளது; 'கூன்' என்றபடி. வலைமுதலியவற்றைச் சுமந்து, முதுகு கூனாயிற்றாம். அடி-12,13: வேங்கை - புலி. 'புலிகளைஅஞ்சாது சென்று கொன்று வெல்லுதலால் வேடுவர்சிவன் குலத்தவர்' என நகை தோன்றக் கூறியவாறு.தலைவன், அக்குலத்தார்க்கு அரசன், "தலைவன்"என்றது, 'தலைவனாயினான் ஒருவன்' என்ற படி. இஃதேஎழுவாய். எனவே, மேற் போந்தன எல்லாம் இவ் ஒருபொருள்மேல் வந்த வினைப் பெயர்களும், வினைக்குறிப்புப் பெயர்களுமாய், இவனது நிலையை வருணித்தவருணனை களாயின. இனி, இவன் செய்த செயல்கள்கூறப்படும். அடி-14: இவன் தாங்கிய வில்லும்,அம்பும் கொலைக் கருவிகளே யாயினும் இறைவழிபாட்டிற்குத் துணையாய் அமைந்தமை பற்றி,"நல்லன்" என்றார். அடி-15: ஏற்றுக் கல் - உயரமான மலை.காற்றுப் போலும் உடல் விரைவு, 'நாதனார் பசிமிகுதற்கு முன்பு விரைந்து சென்று ஊட்டுதல் வேண்டும்'என்னும் உள்ள விரைவினால் நிகழ்ந்தது.
1. திருமுறை - 7.49.1
|