| கணையில் வீழ்த்துக் கருமா அறுத்து, கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி, நாவில் வைத்த நாட்போ னகமும் தன்தலைச் செருகியதண்பளித் தாமமும் | 20 | வாய்க்கலசத்து மஞ்சன நீரும் கொண்டு கானப் பேருறை கண்ணுதல், முடியிற் பூசை அடியால் நீக்கி, நீங்காக் குணத்துக் கோசரிக்(கு)அன்றவன் நேசங் காட்ட | 25 | முக்கண்அப்பனுக்(கு) ஒருகணில் உதிரம |
அடி-16: கரு மா - பன்றி, "இழிவாயகரு விலங்கு"1 எனச் சேக்கிழாரும் கூறினார். அடி-17: கோல் - அம்பு. அடி-18: நாட் போனகம் - அன்றையஉணவு. 'புதிது புதிதாக அமைக்கும் உணவு' என்பதாம். அடி-19: பள்ளித் தாமம் - பூ மாலை.அஃது இடைக் குறைந்து நின்றது. இங்குப் பள்ளித்தாமம் சருகுகள். அடி-20: "வாய் கலசம்" என்றது'வாயே கலசமாயிற்று' என்பதாம். உருவகம் அன்று. அடி-21: 'கொண்டு சென்று' என ஒருசொல் வருவிக்க. வினை முதனிலைகள் திரிந்துபெயராதல்போல, இங்கு 'பெரு' என்னும் பண்புப் பகுதி'பேர்' எனத் திரிந்து பெயராகி பெரிதாகியஇடத்தைக் குறித்தது. கானப் பேர் - காடாகிய பெரியஇடம். அது காளத்தி மலை. அடி-22: செருப்பினை, "அடி"என்றது தகுதி வழக்குப் பற்றி. அடி-23: நீங்காக் குணம் -நீங்காமையாகிய பண்பு. எனவே, பெயரெச்சம் பண்புப்பொருட்டாய் வந்ததாம். அடி-26: கோசரி, 'சிவகோசரியார்'என்னும் அந்தணர். காட்ட - காட்டுதற்கு. அடி-25: "அப்பனுக்கு" என்பதன்பின்னும் 'அவன் செயலால்' என்பது வருவிக்க.
1. பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் - 78.
|