பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை414

தக்கி ணத்திடை இழிதர, அக்கணம்
அழுது, விழுந்து, தொழு(து)எழுந் தரற்றிப்
புன்மருந் தாற்றப் போகாதென்று
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
30ஒழிந்தது; மற்றை ஒண்திரு நயனம்
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க,
அற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையால் அகழ ஆண்டகை
ஒருகை யாலும் இருகைபிடித்து
35ஒல்லைநம்புண் ஒழிந்தது, பாராய்;

அடி-26: தக்கிணர் - வலப் பக்கம்."ஒரு கண்" என்றது 'வலக் கண்' என்றபடி.

அடி-28: புன் மருந்து, நோயின்வலிமையை நோக்க மெலிவுடைத்தான அயல் மருந்து.மருந்து - சாதி யொருமை. 'புண் மருந்து' எனப் பாடம்ஓதலும் ஆம். ஆற்றப் போகாது. கண்ணிற் புண்ணினைஆற்ற வல்லது ஆகாது.

அடி-29: தன்னையே' என்னும்பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. "தான்"என்றது தனது உடம்பினை. "மலர்க் கண்"என்பதில் மலர். மென்மை பற்றி வந்த உவமை.உறுப்புக்கள் பலவற்றினும் கண்ணினது மென்மையைவிதந்த படி. "பகழித் தலையால் அகழ" எனப்பின்னர் வருதலின், "அப்ப" என்றது அம்பாற்பெயர்த்து அப்பியதாயிற்று.

அடி-30: உதிரம் இழிதல் ஒழிந்தது'என்க.

அடி-31: 'பொழிந்த கலுழி, கண்ணீர்போலும் கலுழி' எனத் தனித் தனி இயைக்க. 'கண்ணீர்போலும் கலுழி' என்றதனால் அது மேற் கூறிப் போந்தஉதிரக் கலுழியாயிற்று. பொங்க - ஒரு காலைக்கு ஒருகால் மிகுவதாக.

அடி-32: அற்றது - கை கண்டு.அறுதியிட்டு உணர்ந்த மருந்து. என்று - என்றுதெளிந்த,

அடி-33: ஆண் தகை - எல்லாம் வல்லதன்மையை உடையவன்; இறைவன்.

அடி-34: "ஒரு கையாலும்" என்னும்முற்றும்மை, முயன்று பிடித்தமை குறித்தது. 'இருகையும்'என்பதே பாடம் போலும்!

அடி-35: ஒல்லை - நீ அப்பும் முன்பே.