| நல்லை ! நல்லை ! எனப்பெறும் திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக் கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே. |
திருச்சிற்றம்பலம்
அடி-36: "நல்லை ! நல்லை !!"எனப் புகழப் பெற்றார் என்றது. 'புகழ்ந்து உயர்பதம் அருளினார்' என்னும் குறிப்பினது. 'அப்பதமாவது,தம் அருகிலே இருத்திக் கொண்டது' எனப் பெரியபுராணம் கூறிற்று.1 அடி-37: "திருவேட்டுவர்"என்பது உயர்வு பற்றி வந்த ஒருமைப் பன்மைமயக்கம். திருவேட்டுவர் - திருவருளுக்கு உரியவரானவேட்டுவர். அடி-38: கரு - பிறவி. வேட்டு - மேலும்மேலும் விரும்பி. உழல் காரியம் - உழல்வதாகியசெயல். எனவே, இது தொழில் மேல் தொக்க வினைத்தொகையாம். கருவி இன்றிக் காரியம் கூடாதுஆகலானும், உலகப் பயன்கள் பிறவியைக் கருவியாகஉடைமையானும் 'உலகப் பயனை விரும்புவோர் யாவரும்பிறவியை விரும்புவோரேயாவர்' என்னும்கருத்தினால், உலகப் பயனை விரும்புவோரைப்பிறவியை விரும்பு வோராகவே கூறினார். 'கண்ணப்பநாயனாரை வணங்கு பவர்க்கு உலகப் பற்று நிகழாது.திருவருட் பற்றே நிகழும் என்றபடி. இவ் இரு திருமறங்களும் பின்னர்ச்சேக்கிழார் கண்ணப்பரது வரலாற்றை விளங்கக்கூறுதற்குத் துணையாய் நின்றமையறிக. கல்லாடதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முற்றிற்று.
1. கண்ணப்பர் புராணம் - 185
|