பக்கம் எண் :

417மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

கட்டளைக் கலித்துறை

501.கைக்கும் பிணியொடு, காலன் தலைப்படும்ஏல்லையினில்
எய்க்கும் கவலைக்(கு) இடைந்தடைந்தேன்,வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மதயானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.

2

வெண்பா

502.அடியமர்ந்து கொள்வாயே? நெஞ்சமே, அப்பம்,
இடி,அவலோ(டு) எள்உண்டை கன்னல் - வடிசுவையில்
தாழவானை, ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

3


என அருளிச் செய்தமை அறியத் தக்கது.

501. 'பிணியொடு, கவலைக்கு இடைந்து(யான்) அரவு அரையான் தந்த யானையாகிய நுதற்கண்திருவாளனது திருவடிகளையே (புகலிடமாக) அடைந்தேன்'எனக் கூட்டுக. அதனால், யான் பிணியும் கவலையும்இலனாயினேன். ஆதலால் நீவிரும் அவனது அடிகளையேபுகலிடமாக அடைமின்' - என்பது குறிப்பெச்சம்.

கைத்தல் - கசத்தல்; அஃது இங்கு,வெறுக்கப்படுதலைக் குறித்தது. பிணி - நோய். ஒடு,எண் ஒடு. மேற்காட்டிய ஒளவையார் பாட்டிலும்."மேனி நுடங்காது" என வந்தமை காண்க.தலைப்படுதல் - சந்தித்தல். ஏல்வை - பொழுது.எய்த்தல் - இளைத்துச் செயல் அறுதல். எய்க்கும்கவலை - எய்த்தலால் உண்டாகும் கவலை. எனவே,"எய்க்கும்" என்னும் பெயரெச்சம் காரணப்பொருளில் வந்ததாம். இடைந்து - தோற்று. வெம்மை -சீற்றம், 'வெம்மையோடு' என உருபு விரிக்க.பைக்கும் - படம் எடுத்து ஆடும். 'பணி திருவாளன்' எனஇயையும்.

502.குறிப்புரை: "அடிஅமர்ந்து கொள்வாயே" என்பதை இறதிக்கண்கூட்டுக.

இடி - மா. கன்னல் - கரும்பு. வடிசுவை -இவைகளினின்றும் ஒழுகுகின்ற (மிகுகின்ற) சுவை.தாழ்வான் - உள்ளம் தங்குகின்றவன். ஆழ்வான் -அழுந்தி நுகர்வான். பணியாரங்களை மிக விரும்புவர்மூத்த பிள்ளையார். "அவனை வாழ்த்தியேவாழ்" என்றது. வாழ்த்தினால் அல்லது வாழ்வுஉண்டாகாது' என்றதாம். ஆகையால், 'நெஞ்சமே,அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள்