கட்டளைக் கலித்துறை 503. | வாழைக் கனி,பல வின்கனி, மாங்கனி,தாஞ்சிறந்த கூழைச் சுருள்,குழை அப்பம்,எள் ளுருண்டையெல்லாந்துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென்உளம்பிரியான் வேழத் திருமுகத் துக்செக்கர் மேனி விநாயன. | | 4 |
வெண்பா 504. | விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்; விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும், மண்ணிற்கும் நாதனுமாம்தன்மையினால். கண்ணிற் பணிமின் கனிந்து. | | 5 |
கட்டளைக் கலித்துறை 505. | கனிய நினைவொடு நாடொறும் காதற்படுஅடியார்க்(கு) இனியன், இனி;யொ ரின்னாங் கிலம்எவரும்வணங்கும் |
இருத்திக்கொள் வாயோ' என்க. அமர்தல் -விரும்புதல், ஏகாரம், வினாப் பொருட்டு.ஏகாரத்தைத் தேற்றப் பொருட்டாக்கி,'கொள்வாய்' என ஏவல் முற்றாக உரைப்பினும்அமையும். 503. குறிப்புரை: பல - பலா. கூழைச்சுருள் - இரு முனைகள் குவிந்த, உள்ளே பூரணம்இடப்பட்ட கொழுக்கட்டை. குழை - குழைவு; பாயசம்.துறுத்தல் - திணித்தல் 'துறத்தும் வயிறு' என இயையும்.பேழைப் பெருவயிறு - பெட்டகம் போலும் பெரிதாகியவயிறு. "வயிற்றோடும்" என்னும் இறந்ததுதழுவிய எச்ச உம்மை, நன்கு புகுந்தமையைக் குறித்தது.'என்றன் உளம் புகுந்து பிரியான்' என மாற்றிக்கொள்க. வேழம் - யானை. செக்கர் - சிவப்பு.'செக்கர் வானம்' எனினும் ஆம். 504. குறிப்புரை: ஈற்றடியை,'கண்ணின் கண்டு' என ஒரு சொல் வருவித்து, 'கண்டுகனிந்து பணிமின்' என மாற்றிக் கொள்க. வேட்கை -ஆசை. "தணிவிப்பான்" என்பதற்கு,'நிரப்புவான் போக்குவான்' என இரு பொருளும்கொள்க. கனிதல் - மகிழ்தல். அஃது அரும்பொருள்எதிர்ப்பட்டமை பற்றித் தோன்றுவது. 'பணிந்தால்,மேற்கூறிய பயன்களைப் பெறலாம்' என்பது கருத்து,"விநாயகனே" என்னும் சொல் ஒரு பொருளிலேபலமுறை வந்தது. இது சொற்பொருள் பின்வருநிலை யணி. 505. குறிப்புரை: "எவரும்வணங்கும்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க'எவரும் வணங்கும் முனிவன்' என இயையும்
|