| பனிவெண் பிறை,நறுங் கொன்றைச் சடைப்,பலிதேரியற்கை முனிவன் சிறுவன், பெருவெங்கொல் யானைமுகத்தவனே. | | 6 |
வெண்பா 506. | யானை முகத்தான், பொருவிடையான்சேய்,அழகார் மான மணிவண்ணன் மாமருகன், - மேல்நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என் உள்ளக் கருத்தின் உளன். | | 7 |
கட்டளைக் கலித்துறை 507. | உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்;வன்நஞ்சமுண்ட வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண்கோதை,பங்கத்(து) இளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன்,கைம்முகத்துக் களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே. | | 8 |
முனிவன், சிவபெருமான். 'பிறைச் சடை, கொன்றைச்சடை' என்க. பலி தேர்தல், பிச்சையைப்பலவிடத்தும் சென்று பெறுதல். இயற்கை - இயல்பு."பெரு வெங் கொல்" என்பது யானைக்கு எய்தியஇன அடை கொல் யானை - கொல்லும் தன்மை வாய்ந்தயானை. "நினைவு" என்றது அதனைச் செய்யும்நெஞ்சினை. 'நினைவு கனிய, அதனொடும் காதற்படும்அடியார்க்கு' என்க. "இனி" என்பது,வினைமாற்றின் கண் வந்தது. ஒருவுதல் - நீங்குதல்.ஆம் - உண்டாகும். 'கிலம்( குறை' என்னும்பொருளதாகிய வடசொல். இதன் மறுதலையே 'அகிலம்'என்பது. 'அவனை ஒருவின் கிலம் ஆம்' என்க. 'அது,சிவனது தேர் அச்சு முரிந்தமை முதலியவற்றால்அறியப்படும்' என்பது கருத்து. 506. குறிப்புரை: பொரு விடை - போர்புரியும் இடபம். சேய் - மகன். மானம் - பெருமை. மணி .நீலமணி. நீல மணியின் வண்ணம்போலும் வண்ணத்தைஉடையவன். மாயோன். மா - பெருமை, மருகன்,உடன்பிறந்தாள் மகன். நிகழும் - வழிந்து ஓடுகின்ற(மதம்) 'குமிழி வெள்ளம்' என மாற்றுக. வெள்ள மதம் -வெள்ளம்போலும் மத நீர். உள்ளக் கருத்து -உள்ளத்தில் எழுகின்ற கருத்து. அதன்கண்உளனாதலாவது, கருதப்படும் பொருள் அவனேயாய்இருத்தல். 507. குறிப்புரை: 'என் நெஞ்சில்,கணபதிகண் அளவில்லதோர் காதல் உளது' என இயைத்துமுடிக்க. இளமை, இங்கு அதன் கண் உள்ள அழகைக்குறித்தது. "வளர் இள" என்றது, 'பின்னும் வரும்
|