பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை420

வெண்பா

508.கணங்கொண்ட வல்வினைகள்; கண்கொண்டநெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் சடைமேல், - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலுங் கொன்றையான்தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.

9


இளமை' என்றவாறு. மா மணி - நீல மணி. 'நஞ்சம் உண்டகண்டம்' என இயையும். கோதை - மாலை. அஃது அதனை உடையஉமாதேவியைக் குறித்தது. 'பங்கத்து எம்மான்' எனஇயையும். அத்து, வேண்டா வழிச் சாரியை. அஃதுஇரண்டாவதன் பொருள் குறித்து நின்றது. கண்ணி,முடியில் அணியும் மாலை. கை - தும்பிக்கை 'களகள'என்பது ஒலிக் குறிப்பு. 'சோர் மாமதம்' எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். மா மதம் - கரிய மதம்.களி - மத மயக்கம். "யானைக் கணபதி" என்பது,'செஞ்ஞாயிறு' என்பதுபோல இயைபின்மை நீக்கியவிசேடணத்தையுடைய இருபெயர் ஒட்டு.

508. குறிப்புரை: 'கண் கொண்டநெற்றியையும், சடைமேல் கொன்றையையும் உடையவன்.தந்தளித்த போதகத்தின் தாள் பணிய, கணங்கொண்ட வல்வினைகள் போம்' என இயைத்து முடிக்க.கணம் கொண்ட - கூட்டமாகத் திரண்ட வல்வினைகள் -வலியனவாகிய வினைகள்; சஞ்சிதம். பணம் -பாம்பின் படம். பாந்தள் - பாம்பு. 'பாந்தளையுடையசடை' என்க. தாது அகத்த - மகரந்தத்தை உள்ளே உடைய.'தாதகத்த கொன்றை, தேன் முரலுங் கொன்றை' என்க.தேன், ஒருவகை வண்டு. முரலுதல் - ஊதுதல். அளித்த -தேவர் முதலியோரைக் காத்த, "அளித்தபோதகம்" எனப் பெயரெச்சம் கருவிப் பெயர்கொண்டது போதகம் - யானை.

கைவேழ முகத்தவனைப்படைத்தான் போலும் !
கயாசுரனை அவனால்கொல் வித்தார் போலும்! 1

என அப்பரும் அருளிச்செய்தார்.

அல்லல்போம்;வல்வினைபோம்;அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம்;போகாத் துயரம்போம்; - நல்ல
குணம்அதிகமாம்அருளைக் கோபுரத்தின் மேவும்
கணபதியைக் கைதொழுதக்கால்

எனப் பிற்காலத்து வெண்பா ஒன்றும் கூறிற்று.


1. திருமுறை - 6.53.4.