கட்டளைக் கலித்துறை 509. | போகபந் தத்(து)அதந்தம் இன்றிநிற்பீர்,புனை தார்முடிமேல் நாகபந் தத்(து)அந்த நாள்அம் பிறையிறையான்பயந்த மாகபந் (தத்(து)அந்த மாமழை போல்மதத்துக்கதப்போர் ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந்தேத்துமினே. | | 10 |
வெண்பா 510. | ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால்எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் -தூத்தழல்போல் செக்கர்த் திருமேனிச் செம்பொற்கழல்ஐங்கை முக்கட் கடாயானை முன். | | 11 |
கட்டளைக் கலித்துறை 511. | முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்;வெற்றிமீன்உயர்த்த மன்னிளங் காமன்தன் மைத்துன னே,மணிநீலகண்டத்(து) என்னிளங் காய்களி றே,இமை யோர்சிங்கமே,உமையாள் தன்னிளங் காதல னே,சர ணாவுன் சரணங்களே. | | 12 |
509. குறிப்புரை: போக பந்தம் - உலகஇன்பமாகிய கட்டு. (அதில்) அந்தம் இன்றிநிற்பீர் - முடிவு இல்லாமல் இருந்து கொண்டேஇருப்பவர்களே!, இது விளி. நாக பந்தம் - பாம்பாகியகட்டு. அதனையுடைய இறையான் சிவன். அந்த, பண்டறிசுட்டு. 'அந்த இறையான்' என இயையும். நாள் அம் பிறை- முதல்முதலாகத் தோன்றுகின்ற மூன்றாம் நாட்பிறை. கபந்தம் - கழுத்து. கன்ன மதம் கழுத்து வழியாகமழைபோல ஒழுகுகின்றதாம். அந்த மா மழை - உலகமுடிவுக் காலத்தில் பெய்கின்ற பெருமழை. கதம் -கோபம். கதப் போர், யானை இனம் பற்றிக் கூறியது."ஏத்துமின்" என்றது, 'ஏத்தினால் போகபந்தத்தில் அந்தம் இன்றி நில்லாது, அதற்குஅந்தம் (முடிவு) உளதாகும்' என்றபடி. 510. குறிப்புரை: 'என் உள்ளம்எப்பொழுதும் யானைமுன் ஏத்தியே நிற்கும்' எனஇயைத்து முடிக்க. ஆல், அசை. மா - பெருமை. தனி - ஒற்றை.செக்கர் - சிவப்பு. முன்னர் 'மதம்' கூறினமையால்,பின்னர், "கடாம்" என்றது. களிற்றினைக்குறிக்கும் குறிப்பாய் நின்றது. தனிக் கோடு,செக்கர் மேனி, கழல். ஐங் கை இவை பிறயானைகளினின்று பிரித்த, பிறிதின் இயைபுநீக்கிய விசேடணங்கள். 'அங்கை' என்பது பாடம்அன்றாம். 511. குறிப்புரை: 'உன் சரணங்களேசரணா முன் இளங்காலத்திலே பற்றினேன்' என முடிக்க.மீன் - மீன் எழுதப்பட்ட
|