பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை422

வெண்பா

512.சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க
முரண்உடையேன் அல்லேன் நான்முன்னம் -திரள்நெடுங்கோட்(டு)
அண்டத்தான், அப்புறத்தான், ஆனைமுகத்தான்அமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.

13


கொடி, உயர்த்த - உயர்த்துக் காட்டிய. மன் -தலைவன். இரண்டாவதான இளமை அழகைக் குறித்தது.விநாயகருக்கு மன்மதன் அம்மான் மகன் ஆதல் பற்றிஅவரை, 'அவனுக்கு மைத்துனன்' என்றார். மணிநீலகண்டம் - நீல மணிபோலும் நீலகண்டம்.விநாயகருக்கும் நீலகண்டம் உண்மை.

நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்1

என்னும் ஒளவையார் வாக்காலும் அறிக. என் - எனது.இங்ஙனம் உரிமை பாராட்டியது அன்பினால், 'இளங்களிறு, காய் களிறு' என்க. காய்தல் - இனம் பற்றிவந்த அடை. "சிங்கமே" என்றது. "வடிவத்தில்யானையாய் இருப்பினும், வீரத்தில் சிங்கம்'என்றபடி ஈற்றில் நின்ற இளமை பருவம்உணர்த்தியதன்றி, பிறப்புமுறை குறித்ததன்று.காதலன் - மகன். இளமையிலேயே விடுவன விடுத்துப்பற்றுவன பற்றுதல் முற்றவம் உடையார்க்கன்றிஆகாது. இவ்வாசிரியர், "முன் இளங்காலத்திலேபற்றினேன்" என்றமையால் அத்தகைய தவம்உடையாராதல் விளங்கும். முன் இளங் காலம் -பருவங்களில் முதலதாகிய இளமைப் பருவம்,முன்னாயதனை "முன்" என்றது ஆகுபெயர்."சரண்" இரண்டில் முன்னது அடைக்கலம்; பின்னதுதிருவடி.

512. குறிப்புரை: 'முன்னம் திரள்நெடுங்கோட்டு ஆனை முகத்தான், அண்டத்தான்,அப்புறத்தான், அமரர் பண்டத் தான் தாள் நான்பண்டு பணியா, - சரண் உடையேன் - என்று தலைதொட்டிருக்க முரண் உடையேன் அல்லேன்' என இயைத்துமுடிக்க. முன்னம் திரள் - முகத்திற்கு முன்னே திரண்டுதோன்றுகின்ற. அண்டத்தான் - அனைத்துஅண்டங்களிலும் உள்ளவன், (ஆயினும்) அப்புறத்தான் -அனைத்துஅண்டங்கட்கும் அப்பாலும் உள்ளவன்.பண்டித்தான் - அடையத்தக்க பொருளாய் உள்ளவன்.சரண் - புகலிடம். முரண் - வலிமை. "பண்டமாப்படுத்து என்னை"2 என்னும் அப்பர்திருமொழியையும் காண்க. பணியா - பணிந்து. 'தலைதொடுதல்' என்பது சூளுரைத்தலைக் குறிப்பதொருவழக்கு


1.விநாயகர் அகவல்.
2. திருமுறை - 4.5.4.