பக்கம் எண் :

423மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

கட்டளைக் கலித்துறை

513.பண்டம்தம் ஆதரத் தான்என் றினியனவேபலவும்
கொண்(டு)அந்த நாள்குறு காமைக் குறுகுவர்கூர்உணர்வில்
கண்(டு)அந்த நீண்முடிக் கார்மத வார்சடைக்கற்றைஒற்றை
வெண்தந்த வேழ முகத்(து)எம் பிரானடிவேட்கையரே.

14

வெண்பா

514.வேட்கை வினைமுடித்து, மெய்யடியார்க்(கு)இன்பஞ்செய்து
ஆட்கொண் டருளும் அரன்சேயை, -வாட்கதிர்கொள்

மொழி. 'பண்டே பணிந்தேனாயினும். அந்நிலையில்- உன்னையே நான் சரணாக (புகலிடமாக) உடையேன் -என்று சூள் உரைக்கும் அளவிற்கு நான் உறுதியுடையேன்அல்லேன்' என்பதாம். 'அத்தகைய உறுதியை எனக்குநீ அருளல் வேண்டும்' என்பது கருத்து.

நின்றன் வார்கழற்கு அன்புஎனக்கும் -
நிரந்தரமாய் அருளாய்1

எனவும்,

"இறவாத இன்ப அன்பு வேண்டி"எனவும் போந்தனவும் இக்கருத்தே பற்றியாம்.2

513. குறிப்புரை: "கூர் உணர்வில்" என்பதுமுதலாகத் தொடங்கி யுரைக்க. கூர் உணர்வு . நுணுகியஞானம் 'உணர்வில் கண்டு' என்க. "அந்த" என்பதுபண்டறி சுட்டு. 'அந்த எம் பிரான்' என இயையும்.கார் மதம் - கரிய மத நீர். 'மேகம் போலப்பொழியும் மதம்' என்றலும் ஆம். விநாயகருக்கும்சடைமுடி உள்ளது. 'ஒற்றைத் தந்தம்' என இயையும். அடிவேட்கையார் - அடிக்கண் அன்பு செய்பவர்."பண்டம்" என்றும், "தம் ஆதரத்தான்"என்றும் உணர்ந்து குறுகலர் - என்க. பண்டம் -தமக்குப் பொருளாய் உள்ளவன். ஆதரத்தான் -அன்பிற்கு உரியவன். இனியன - இனிய சுவை யுடையபண்ணியங்கள். 'கொண்டு குறுகுவர்' என்க. அந்த நாள்குறுகாமை - முடிவு நாள் உண்டாகாதபடி; 'என்றும்நிரந்தரமாக' என்பதாம். குறுகுவர் - அடைவர்.

514. குறிப்புரை: 'மெய்யடியார்க்கு வினை முடித்துஇன்பம் செய் சேய்' என இயைக்க. வேட்கை வினை -விரும்பிய விருப்பத்தை ஏற்ற செயல். என்றது,'விரும்பிய செயல்' என்றபடி. சேய் - மகன்.


1. திருவாசகம் - திருச்சதகம் - 6.
2. பெரிய புராணம் - காரைக்காலம்மையார் - 60.