பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை424

காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.

15

கட்டளைக்கலித்துறை

515.விண்ணுதல் நுங்கிய விண்ணும் மண்ணும்செய்வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள்பாய்மதமாக்
கண்ணுதல், நுங்கிய நஞ்சமுண் டார்கருமாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே.

16

வெண்பா

516.பெருங்காதல் என்னோடு, பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே

வாட் கதிர் - ஒளிக் கதிர். கதிராவது - எங்கும்பரந்து செல்வது. 'கதிர் மார்பில் காந்தாரத்தார். கமழ் தார்' என்க. காந்தாரம் - (வண்டுகளின்)இசை, விண் - இங்குச் சிவலோகம். எனவே, அமரர்,பதமுத்தி பெற்றவர்களாவார். 'பத முத்திபெற்றவர்கள் விநாயகரை வணங்கி வாழ்வர்'என்றவாறு.

515. குறிப்புரை:விண்ணுதல் - 'விண்'என ஒலித்தல். நுங்கிய விண் - அங்ஙனம் ஒலிக்கும்ஒலியைத் தன்னுட் கொண்ட ஆகாயம். "விண்"என்பது அதன்கண் உள்ள உலகத்தையும். "மண்"என்பது அதனால் ஆகிய உலகத்தையும் முன்னர்க்குறித்துப் பின்னர் அவ்வுலகங்களில் வாழும்தேவரையும்., மக்களையும் குறித்தலால் இருமடியாகுபெயர். வினைப் பயனைப் பண்ணுதல் - தொடங்கியசெயலின் பயனை விளைவித்தல். அஃதாவது, அச்செயல்இடையூறின்றி இனிது முற்றுப்பெறச் செயதல். பெண்தநுப் பிரியா ஒரு பாகன் - பெண்ணைத் தனதுஉடம்பினுள் பிரியாதவாறு ஒரு பாகத்தில் கொண்டசிவபெருமான். 'பிரியாது' என்னும் எதிர்மறைவினையெச்சத்தின் ஈறு தொகுத்தலாயிற்று.அவ்வெச்சம். "பாகன்" என்னும்வினைக்குறிப்புப் பெயரோடு முடிந்தது. பெருமகன் -மூத்த மகன். மெய் அன்பர்கள், - கண் நுதலையும்,கருமாமிடற்றையும், பெண் தநுப் பிரியா ஒருபாகத்தையும் உடையவனுக்குப் பெருமகனாய்த்தோன்றி யவனே! தேவரும், மக்களும் தொடங்கியசெயல்களை இடை யூறின்றி இனிது முற்றுவித்தலே உனதுகடன் - என்பார்கள் என இயைத்து முடிக்க.

516. குறிப்புரை: 'காதலையுடையஎன்னோடு' என இரண்டாவது விரிக்க. ஒடை - நெற்றிப்பட்டம். நெற்றி மருங்கு ஆர - நெற்றியின் இருபக்கங்களிலும் பொருந்துபடி. வார் - நீண்ட. திரு