பக்கம் எண் :

425மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள்சோர
வருவான்தன் நாமம் வரும்.

17

கட்டளைக் கலித்துறை

517.வருகோள் தருபெருந் தீமையும், காலன்தமரவர்கள்
அரு(கு)ஒட் டருமவ ராண்மையும் காய்பவன்,கூர்ந்தன்பு
தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத்தறியணையும்
ஒருகோட்(டு) இருசெவி முக்கண்செம் மேனியஒண்களிறே.

18

வெண்பா

518.களியானைக், கன்றைக் கணபதியைச்,செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்(கு) உதவும் - அளியானைக்
கண்ணுவதும், கைத்தலங்கள் கூப்புவதும்,மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.

19


- அழகு 'நெற்றி மருங்கு ஆரச் செவிகளை வீசி, முகத்தில் மதங்கள் சோர
தன் நாமம் என்னோடு வரும்' என இயைத்து முடிக்க.நாமம் உடன் வருதலாவது, ஓரிடத்தில் நில்லாதுநடந்து சென்றாலும் நாமங்களை உச்சரித்துக்கொண்டே நடத்தலாம். "செம்முகத்துக்கார்மதம்" என்பது முரண் தொடை.

517. குறிப்புரை: வரு கோள் - தசா புத்திகளாகவும்,பிறவாறாகவும் வந்து பற்றுகின்ற கிரகங்கள். அருகுஒட்டரும் - அருகினின்றும் அப்பாற்போகும்படிதுரத்த இயலாத. அரும், பண்படியாகப் பிறந்த குறிப்புவினைப் பெயரெச்சம். அவர், காலன் தமர் (தூதுவர்).அன்பு தருகோள் தரும் மரபின் பத்தர் - அன்பினால்தரப்படும் கொள்கையால் தரப்படும் நெறிமுறைகளையுடைய அடியார். 'அன்பு காரணமாகவே வழிபடும்அடியார்கள்' என்றபடி சித்தத் தறி - உள்ளமாகியதறி; "தறி" என்றது அவர் கருது கோள் பற்றி,உருவகம் அன்று. 'தறியை அணையும் களிறு' என இயையும்."ஒரு கோட்டுச் செம்மேனிய களிறு" என்றது.'இஃதோர் அதிசயக் களிறு' என்றபடி. களிறு -முகத்தால் யானையாகியவன். எனவே, "களிறு"என்றது 'யானைபோல்பவன்' என உவமை யாகுபெயர்.ஆகுபெயர் அல்லாக்கால், "காய்பவன்" எனஉயர்திணை வினையோடு இயையாது. ஏகரம் பிரிநிலை.'களிறே தீமையும். ஆண்மையும் காய்பவன்' என இயைத்துமுடிக்க. 'ஆதலின் அவனையே அடைக' என்பதுகுறிப்பெச்சம்.

518. குறிப்புரை: களி - மதக் களிப்பு. மதம், இங்குஅருள். "யானைக் கன்று" என்பது, 'கன்றாகியயானை' என்னும் பண்புத்