கட்டளைக் கலித்துறை 519. | நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தைநாணநின்ற பொல்லா முகத்(து)எங்கள் போதக மே!புரம்மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னே!யென்றுமெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி, மாட்டான் இருக்கமலர்த்திருவே. | | 20 |
திருச்சிற்றம்பலம்
தொகை. முன்பின்னாகிய புணர்ச்சி. "யானை"என்பது பிறிதின் இயைபு நீக்க வரின், ஆறாம்வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியாம். இங்குஅவ்வாறில்லை. செம்பொன் ஒளியான் - செவ்வியபொன்னினது ஒளிபோலும் ஒளியை யுடையவன், அளியான்- அருளாளன். கண்ணல் - கருதல். மற்று, அசை, நல்லார்கடன் - நல்லொழுக்கம் உடையவர்கட்கு இன்றியமையாக் கடமைகள். 'கடன் கணபதியைக் கண்ணுவதும், கைத்தலங்கள் கூப்புவதும், அவன்தாள் நண்ணுவதும்' எனஇயைத்து முடிக்க. நல்லாக்கு இவைகளைக் கடனாகக்கூறியது, நல்லார் எண்ணியவற்றை இடையூறின்றி இனிதுமுடித்தற் பொருட்டும், தீயாள் எண்ணியவற்றை இடைமுரிவித்தற் பொருட்டுமே இறைவனால் தந்தருளப்பட்ட கடவுளாதல் பற்றி. இதனைத் "தனதடி வழிபடுமவர்இடர் - கணபதி வர அருளினன்... இறையே" எனஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தமையான் அறிக. 519. குறிப்புரை:நல்லார், இங்குஇரத்தின பரீட்சையில் வல்லவர், அவரால்,'குற்றம் உடைத்து' என்று பழித்தல் இல்லாத பவளம்என்க. பவளத்து - ஐ பவளத்தினது அழகு. 'நாண நின்றபோதகம்' என இயையும். 'பொற்' என்பது எதுகைநோக்கி, 'பொல்' எனத் திரிந்து நின்றது. பொள் -பொள்ளல்; புழை. புழை ஆம் முகம் - உள்துளைபொருந்திய தும்பி முகம். போதகம் - யானை எங்கள்போதகமே, விநாயகனே - என்று துதித்து, அதனால்உள்ளமே யன்றி உடம்பும் மகிழ்வடைய வல்லாரதுமனத்திலின்றி (ஏனையோர் மனங்களில்) மலர்த்திரு இருக்க மாட்டாள்' என இயைத்து முடிக்க. முன்தவம் உடையார்க்கன்றி இது கூடாமையின்"வல்லார்" என்றார். மெய் மகிழ்ந்தலாவது,புளகம் போர்த்தல். மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை முற்றிற்று.
|