பக்கம் எண் :

427சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

கபிலதேவ நாயனார்
அருளிச் செய்த

21. சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

வெண்பா
திருச்சிற்றம்பலம்

520.அந்தி மதிமுகிழான்; அந்தியஞ்செந்நிறத்தான்;
அந்தியே போலும் அவிர்சடையான் - அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.

1


520. குறிப்புரை:இங்கு, 'இரட்டை மணிமாலை' என்று இருப்பது 'இணைமணி மாலை' என்று இருத்தல்வேண்டும். ஏனெனில், இப்பொழுது இதில் கிடைத்துள்ளபாடல்கள் - 37. 37 ஆவது பாடல் இப்பிரபந்தத்தின்இறுதிப்பாடல், முதற் பாடல் தொடங்கிய அந்தச்சொல்லால் முடிய வேண்டும். அவ்வாறு முடியவில்லை.வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் மாறி மாறி.அந்தாதியாக வந்து, 20 பாடல்களில் முடிவது இரட்டைமணி மாலை. அவை அவ்வாறு வந்து, 100 பாடல்களில் முடிவதுஇணைமணி மாலை. எனவே இதில் எஞ்சிய பாடல்கள்கிடைத்தில. பதிப்புக்களில் 'இரட்டை மணிமாலை'என்று இருப்பதால், இங்கும் அவ்வாறுசொல்லப்பட்டது.

இப்பாட்டில், "அந்தி"என்னும் சொல் ஒரு பொருளிலே பின்னும் பின்னும்வந்தது சொற்பொருட் பின்வருநிலை யணி. அந்தி -மாலைக் காலம். மதி முகிழ் - முகிழ் மதி; இளந்திங்கள்; மூன்றாம் பிறை. அந்திச்செந்நிறம். உவமைத் தொகை. அவிர் -ஒளிவிடுகின்ற. "அந்தியில்". என்பதில்,"இல்" என்பது 'பின்' என்னும் பொருட்டாகியஏழன் உருபு. இல்லின் பின் உள்ளதை. 'இல்லில்உள்ளது' என்றல் போல. தூங்கு இருள் - திணிந்த இருள்.யாமம், இடையாமம். வீங்கு இருள் - மிகுந்த இருள்.இதில் "இருள்" என்றது கருமையை. 'சுடு நீற்றான்மிடறு யாமமே போலும்; அவன் மதி முகிழான்;செந்நிறத்தான்; அவிர்சடையான்' என இயைத்துமுடிக்க. இது சிவபெருமானது திருவுருவை வியந்தது.