கட்டளைக் கலித்துறை 521. | மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்றஞான்று,மெல் லோதிநல்லாள் மடற்றா மரைக்கைகள் காத்தில வே!மழுவாளதனால் அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள்செய்தகொள்கைக் கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண்காட்டெங் கரும்பினையே. | | 2 |
வெண்பா 522. | கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட நெருப்புத் திருநெற்றி நாட்டம்; -திருச்சடையில் திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி; எங்கள் இமையோர் இறைக்கு. | | 3 |
521. குறிப்புரை: 'வெண்காட்டு எம்கரும்பு போல்வானை (அவன் தனது) மிடற்றில் நஞ்சம்வைக்கின்ற ஞான நல்லாள் தாமரைக் கைகள்காத்திலவே; (தடுத்திலவே; அஃது ஏன்?) என இயைத்துமுடிக்க. மெல் ஓதி - மென்மையான கூந்தல். நல்லாள் -அழகுடையவள்; உமை. மடல் - இதழ்கள். மழுவாளால் அன்றுதாதையைத் தாள் எறிந்தான் - சண்டேசுர நாயனார்.'கொள்கைக் கரும்பு' என இயையும். கடல் - கடலைச்சார்ந்த நிலம். தாழ் வயல் - பள்ளமான வயல்கள்.நெல் - நெற்பயிர். ஏறும் - வளர்கின்ற. வெண்காடு.'திருவெண்காடு' என்னும் தலம். 'வெண்காட்டின்கண்உள்ள கரும்பு' என்க. கரும்பு, உவமையாகுபெயர்.'தடாமைக்குக் காரணம். இதனால் இவற்கு விளைவதொருதீங்கில்லை என அறிந்திருந்தமையே' என்பதுகுறிப்பு. இங்ஙனம் இறைவியது அறிவைப் புகழும்முகத்தால். இறைவனது ஆற்றலைப் புகழ்ந்தவாறு. பலதலங்களுள் ஒன்றில் வைத்துப் புகழ்ந்தவாறு. 522. குறிப்புரை: 'எங்கள் இறைக்குத்திருநெற்றி நாட்டம் சுட்ட நெருப்பு; திருமேனிதிங்கள் புரையும்' என இயைத்து முடிக்க. நாட்டம் -கண். திருமேனி திங்களை ஒத்தல்திருவெண்ணீற்றால், 'திருச்சடை மட்டும்திங்களால் விளங்குவதன்று; திருமேனி முழுதுமேதிங்களைப்போல விளங்கும் என்றற்குத்திருச்சடைமமேல் திங்களையே உவமை கூறினார்.திரள் பொன் - பொன்திரள், பொன்திருமேனிஉவமத் தொகை. இதுவும் திருவுருவின் சிறப்பையேபுகழ்ந்தவாறு. "இமையோர் இறை" என்பது கடவுள்' என்னும் பொருட்டாய், "எங்கள்" என்பதனோடுஆறாவதன் தொகை படத் தொக்கது.
|