கட்டளைக் கலித்துறை 523. | இறைக்கோ குறைவில்லை? உண்(டு);இறை யே;எழிலார்எருக்கு நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடிநக்கர்சென்னிப் பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம்பிரான்உடுக்கும் குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங்குறைவில்லையே. | | 4 |
வெண்பா 524. | இல்லை பிறவிக் கடலேறல்; இன்புறவில் முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை விடையானை, வேதியனை, வெண்மதிசேர்செம்பொற் சடையானைச் சாராதார் தாம். | | 5 |
523. குறிப்புரை: (எல்லார்க்கும்குறைகள் உண்டு; இறைவனுக்கு யாதும் குறையில்லை' எனக்கூறினால்.) 'இறைக்கோ குறைவில்லை? உண்டு. (ஆயினும்)இறையே. (சிறிதே அஃது யாது எனின்.) எம்பிரான்(தான் சூடியுள்ள) ஒருபாதி யாகிய பிறைக்கு மற்றொருபாதி பெறவேண்டிய இளிவரலைக் கருத்திற்கொண்டு,தான் உடையின்றிக் கோவணம் மட்டும்உடுத்திருத்தலை நீங்கினால், அதற்குப்பின்அவனுக்கு ஏதும் குறையில்லை' என இவ்வாறுஇயைத்துரைக்க. 'இறைக்கு யாதும் குறையில்லை'என்பாரை மறுப்பார்போல இவற்றைச் சிலகுறைகளாகக் கூறியது, அவர் கூறியதையே மறைமுகமாகவலியுறுத்தியதாம். இது பழிப்பதுபோலப் புகழ்ந்தது. நறை - தேன். கோமளம் - அழகு.'சடைச் சென்னி நக்கு ஆர் பிறை' என மாற்றிக்கொள்க. 'நக்கார்' என்பது குறுக்கல் பெற்றது. நக்கு- ஒளிவீசி. "பிளவு" என்பது 'பாதி' என்றபடி.இளி - இளிவரல். 'கருத்திற் கொண்டு' என்பது.கருத்திற் கொண்டு ஆவன செய்தலாகிய தன் காரியம்தோற்றி நின்றது. 524. குறிப்புரை:இன் புறவு - இனியகாடு. முதுகுன்று - திருமுதுகுன்றத் தலம். 'முதுகுன்றில்உள்ள' என்க. 'கொல்' என்பது ஐகாரம் பெற்று,"கொல்லை" என வந்தது. 'கொல் விடை' என்பதுஇன அடையாய். ஆற்றல் மாத்திரையே விளக்கிற்று.'போர்விடை' என்றபடி. "விடையானை.... சாராதார்தாம் பிறவிக் கடல் ஏறல் இல்லை" என்க.இதனால், 'பிறவி நீங்குமாறு சிவபத்தியன்றி வேறுஇல்லை' என்பது கூறப்பட்டதாம். "யதா சர்மவதாகாசம் வேஷ்ட
|