கட்டளைக் கலித்துறை 525. | தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத்தலையிடத்துத் தாம்அரைக் கோவணத் தோ(டு)இரந் துண்ணினுஞ்,சார்ந்தவர்க்குத் |
யிஷ்யந்தி மாநவா: ததாசிவ மவிஜ்ஞாயதுக்கஸ்யாந்தோ பவிஷ்யதி!!" என்னும்சுருதியையும்1 அதனை மொழி பெயர்த்து, பரசிவ னுணர்ச்சி யின்றிப் | பல்லுயிர்த் தொகையுமென்றும் | விரவிய துயர்க்கீ றெய்தி | வீடுபே றடைது மென்றல், | உருவமில் விசும்பிற் றோலை | உரித்துடுப் பதற்கொப்பென்றே | பெருமறை பேசிற் றென்னில், | பின்னும்ஒர் சான்று முண்டோ |
எனக் கந்த புராணமும்,2 மானுடன் விசும்பைத் தோல்போற் | சுருட்டுதல் வல்ல னாயின் | ஈனமில் சிவனைக் காணாது | இடும்பைதீர் வீடும் எய்தும்; | மானமார் சுருதி கூறும் | வழக்கிவை யாத லாலே | ஆனமர் இறையைக் காணும் | உபாயமே அறிதல் வேண்டும் |
எனக் காஞ்சிப்புராணமும்3 கூறுவனவற்றையும்,மற்றும் அவனவ ளதுவெனு மனவதொ றொன்றும்இச் சிவனலால் முத்தியில் சேர்த்து வார் இலை; துவளரும் இம்முறை சுருதி கூறுமால்; இவனடி வழிபடின் முத்தி எய்துவாய் என அக்காஞ்சிப் புராணமும்4 கூறுதலையும்காண்க. 525. குறிப்புரை:ஈற்றடியை முதலிற்கூட்டி யுரைக்க. தாமரைக்கோ - பிரமன். தலை யிடம் -வாயிற் படியிடம். 'தாம் அரையிலே கோவணத்தோடுஇரந்து உண்ணினும்' என்க
1. சுவேதாசுவதர உபநிடதம் 2. தட்ச காண்டம் - உபதேசப் படலம் - 25. 3. சனற்குமார படலம் - 43. 4. திருநெறிக் காரைக்காட்டுப் படலம் - 29.
|