| தாமரைக் கோமளத் தோடுஉல காளத்தருவர்கண்டீர்; தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச்சங்கரரே. | | 6 |
வெண்பா | 526. | சங்குகோள் எண்ணுவரே பாவையரைத், தம்அங்கம் பங்குபோய் நின்றாலும்; பாய்கலுழிக் - கங்கை வரியராப் போதும் வளர்சடையாய், நின்போல் பெரியர்ஆ வாரோ பிறர். | | 7 |
"கோவணத்தோடு" என்றது, 'கோவணத்தைமாத்திரமே உடுத்து' என்றபடி. தாமரைக் கோமளம் -திருமகள். கண்டீர், முன்னிலையசை. தாமரைக்கோமளக் கை - தாவுகின்ற மானையேந்திய அழகிய கை.தவளப் பொடி - வெண்பொடி; திருநீறு 'தாம்கோவணத்தோடு இரந்து உண்ணினும் தம்மைச்சார்ந்தவர்க்கு உலகாளத் தருவர்' என்க. தான்நாளும் பிச்சைபுகும்போலும்தன்அடியார் வான்ஆள, மண் ஆள வைத்து என நக்கீர தேவரும் கூறினார்.1 இப்பாட்டு யமகம்என்னும் சொல்லணி பெற்றது. 526. குறிப்புரை: "பாய் கலுழி...வளர் சடையாய், தம் அங்கம் பங்கு போய்நின்றாலும் பாவையரைச் சங்கு கோள் எண்ணுவரே;(ஆயினும்) பிறர் நின்போல் பெரியர் ஆவாரோ?(ஆகார்.) - எனக் கூட்டி யுரைக்க. அங்கம் - உடம்பு.பாவையர் - மகளிர். "சங்கு கோள் எண்ணுவர்"என்றது, 'தம்மைக் காதலிக்கச் செய்ய விரும்புவர்'என்றபடி. காதல் மீக்கூரப் பெற்ற மகளிர்க்கு அவர்தம் சங்க வளைகள் கழன்று வீழ்தல் இயல்பு. அதனைநிகழ்விக்கச் சிலர் எண்ணுதலையே, "சங்குகோள் எண்ணுவர்" என்றார். ஏகாரம் தேற்றம்."பிறர், அங்கம் பங்கு போய் நின்றாலும் சங்குகோள் எண்ணுவரே ஆனாலும் நின்போல் பெரியவர்ஆவரோ" என்றது, 'நீ அங்கம் பங்குபோய்நின்றாலும் பாவையரைச் சங்கு கொண்டுபெரியவன் ஆகின்றாய்; அது மற்றவர்களுக்குக் கூடுமோ' என்றபடி.அங்கம் பங்குபோதல் சிவனுக்கு,உமாதேவிக்கு ஒருபாகத்தைக் கொடுத்ததனாலும், பிறர்க்கு, உடம்புநரை திரை மூப்புப் பிணிகளால்மெலிதலாலும் பொருந்துகின்றது. பாவையரைச் சங்கு கொள்ளுதல்சிவனுக்குத் தாருகாவனத்து இருடியர் பத்தினிகளைமையல் செய்வித்ததனாலும், பிறர்க்கு, மகளிரைமையல் செய்விக்க
1. கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி - 53.
|