பக்கம் எண் :

433சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

வெண்பா

528.வானம் மணிமுகடா, மால்வரையே தூணாக,
ஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழு(து) ஆரூர்
எம்மானுக் கெய்தா திடம்.

9

கட்டளைக் கலித்துறை

529.இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர்; நின்வலப் பாகத்துமான்மழுவும்;
விடப்பா சனக்கச்சும்; இச்சைப் படநீறணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங்கண்ணுதலே.

10


528. குறிப்புரை:மணி முகடு - அழகியமேற் கூரை. மால் வரை - பெரிய அட்டதிசை மலைகள்.பார் - பூவுலகம். அரங்கு - ஆடும் மண்டபம். அம் மாமுழவு - அழகிய, பெரிய மத்தளம். இது வாசிப்பாரால்வாசிக்கப்படும். எய்தாது - போதாது. இங்குக் கூறியஆட்டம், பிரம தேவனுடைய நித்திய கற்பங்களின்முடிவில் செய்யப்படும் நடனம். "கானகம்"என்றது உயிர்கள் ஒடுங்கிய நிலையில் உள்ளஉலகத்தை. அப்பொழுதும் சிவபெருமானது அருளிலேஉயிர்கள் பிழைக் கின்றன' என்பதாம். 'முகடா, தூணா,அரங்காக ஆடும் பொழுது ஆரூர் எம்மானுக்கு இடம்எய்தாது' என்க. 'இங்ஙனம் ஆகலின், அவன்ஊர்தோறும் உள்ள சுடுகாட்டில் ஆடுவதாக நினைப்பாரதுநிலைமை எத்தன்மையது' என்பது கருத்து. சிவனதுபெருநிலையை எடுத்தோதியவாறு.

529. பொழிப்புரை: 'தனது இடப்பாகத்தில் உடையா ளாகிய, வரை ஈன் பால்மொழிஉள்ளாள்' என்பர்; அங்கும், 'வலப்பாகத்தில்மானுக்கு நேராக மழு உள்ளது என்பர்; அங்கும்,'வயிற்றில், நஞ்சுள்ள பாத்திரமாகிய பாம்பாகியகச்சு உள்ளது' என்பர்; அங்கும், விருப்பம்உண்டாதலால் திருநீற்றை நிறையப் பூசி யிருந்தும்எங்கள் சிவபெருமான், மிக்க மதம் பொருந்தியபரிய யானையின் தோலை அந்த எல்லா இடங் களும்மறையும் படி போர்த்துள்ளான்.

குறிப்புரை: 'இஃது எதற்கு' என்பதுகுறிப்பெச்சம். மலைமகள், மழு, பாம்பு, திருநீறுஇவற்றின் மேல் உள்ள ஆசையால் இவற்றைத் தன்திருமேனியில் கொண்டுள்ள சிவபெருமான் அந்தக்கோலம் சிறிதும் தோன்றாதபடி யானைத் தோலால்மூடியிருப்பது ஏன்' என்றபடி. 'திருநீறே கவசமாய்எங்கும் பொதிந்திருக்க, மற்றும் ஓர் கவசம்மிகை' என்பதும் கருத்து, "இடப்பாகம்"முதலியவற்றைச்