கட்டளைக் கலித்துறை 531. | மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ,விண்டவர்தம் பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ,நற்றவர்சூழ் அதிகைமங் கைத்திரு வீரட்ட, வாரிட்டதேனுமுண்டு கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே? | | 12 |
வெண்பா 532. | கருதுங் கருத்துடையேன்; கையுடையேன் கூப்பப்; பெரிதும் பிறதிறத்துப் பேசேன், - அறிதன்றே யாகப், பிறையான் இனியென் அகம்புகுந்து போகப் பெறுமோ புறம். | | 13 |
531, குறிப்புரை:மதி உயிர்களின்அறிவு. கோழிருள் கண்டவ - திணிந்த இருள்போலும்மிடற்றை உடையவனே. 'கண்டன்' என்னும்சினையடியாகப் பிறந்த பெயர் இடையே அகரத்தைவேண்டாவழிச் சாரியையாகப் பெற்று,"கண்டவன்" என நின்றது. இனி, 'இருள் கண்டவ'எனப் பாடம் ஓதி, 'ஊழிக் காலத்து இருளைக்கண்டவனே' என உரைப்பினும் அமையும். விண்டவர் -பகையால் நீங்கினவர். பதி - ஊர், அதிகை. மங்கை -திருவதிகைத் தலம். "அதியரைய மங்கைஅமர்ந்தார் போலும்"1 என அப்பரும் அருளிச்செய்தார். கதி மயங்க - வழி பலவாய்க்கூட. 'பலஊர்களுக்குச் சென்று' என்றபடி. 'கண்டல, வானவ,வீரட்ட, ஆர் இட்டதேனும் உண்டு கதி மயங்கச்செய்வதையே செல்வமாக நீ கருதலாமோ?' (இஃதுஉனக்குத் தகுதியா?) என முடிக்க. இதுவும் பழித்ததுபோலப் புகழ்ந்தது. சிவபெருமான் வைரவரைத்தோற்றுவித்துப் பிரம கபாலத்தில் இரத்த பிச்சைஏற்கச் செய்தது தேவர்களது அகங்காரங்களை அடக்குதற்பொருட்டும், பிட்சாடனராயச் சென்று பிச்சைஏற்றது தாருகாவன இருடியரது அறியாமையைப் போக்குதற்பொருட் டும் ஆதலைச் சொல்லாமற் சொல்லிவியந்தவாறு. 532. குறிப்புரை:கருதுதல் -நினைத்தல். கருத்து - மனம் "கருதும்" என்றதும்,'கருதுதற்கு' என்றவாறேயாம். 'கூப்பக் கையுடையேன்'என்க. எனவே, 'யான் அவனைக் கருதுதற்கும்,தொழுதற்கும் தடைஎன்னை' என்றபடி. அரிது அன்றே -(தடையில்லைளாகவே) அவையியல்வது அரிதாதலே இல்லை.ஏகாரம் தேற்றம். 'அவை யியல்வது அரிதன்று ஆதலால்.பிறையான் என் அகம் (மனம்) புகுந்து புறம் போகப்பெறுமோ' என்க. புகுந்து
1. திருமுறை - 6.82.2
|