பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை436

கட்டளைக்கலித்துறை

533.

புறமறை யப்புரிபுன்சடை விட்(டு)எரி பொன்திகழும்
நிறமறை யத்திரு நீறு துதைந்தது; நீள்கடல்நஞ்(சு)
உறமறை யக்கொண்ட கண்டமும் சாலஉறைப்புடைத்தால்,
அறமறை யச்சொல்லி வைத்(து)ஐயம் வேண்டும்அடிகளுக்கே.

14

வெண்பா

534.அடியோமைத் தாங்கியோ ? ஆடை யுடுத்தோ ?
குடியோம்ப மாநிதியங் கொண்டோ ? -பொடியாடும்
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய், நின்ஊரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.

15


- புகுந்தபின். “இனிப் புறம் போகலொட்டேனே” எனமாணிக்கவாசகரும் அருளிச் செய்தார்.1

533. குறிப்புரை:ஈற்றடியைமுதலிற் கூட்டி யுரைக்க. அறம் மறையச் சொல்லி -அறத்தை மறைபொருளாய் நிற்கும்படி (மறைகளின்உள்ளேயிருக்கும்படி) சொல்லி வைத்து. ஐயம்வேண்டும் - (அது நடை முறையில் நிகழ வேண்டித்) தானேபிச்சை வேண்டி நிற்கின்ற. புறம் - முதுகு. விட்டு -தாழ விடப்பட்டு. இஃது எண்ணின்கண் வந்தவினையெச்சம். எரி பொன் திகழும் - நெருப்பில்காய்கின்ற பொன்போலும் நிறம். துதைந்தது -நிறையப் பூசப்பட்டது. உற மறைய - முற்றிலும்மறையும்படி, “கண்டமும்” என்னும் உம்மை சிறப்பு.உறைப்பு - உரம்; வலிமை. ஆல், அசை. இதுவும்திருமேனியை வருணித்துப் புகழ்ந்தவாறு.

534. குறிப்புரை: ‘பொடிஆடும்’ என்பது முதலாகத் தொடங்கி, “உரை”என்பதை, “கொண்டோ” என்பதன் பின்னர் வைத்துஉரைக்க. தாங்குதல் - புரத்தல். குடி - மனைவியும்,மக்களும், ஆடையே இல்லாதவனை “ஆடை உடுத்தோ”என்றது, அவனது நிலையைச் சுட்டிக்காட்டி நகைத்தவாறு.“அடியோமைத் தாங்கியோ” என்றதும், “குடிஓம்பவோ”என்ற துங்கூட அவ்வாறு தாங்காமையையும்,ஓம்பாமையையும் மறுதலை முகத்தாற் கூறிநகையாடினவேயாம். ‘உன் அடியார்கள் ஒன்றும்அற்றவர்கள்தாமே? உன்னுடைய மனைவியும், மக்களும்தங்கள் தங்கள் திறமையால்தானே மக்களிடம்வழிபாடு பெறுகிறார்கள்?’ என்பது கருத்து. ‘அதனால்,நீ உன் ஊரை ஒற்றியாக்கியது வீணேயன்றோ’


1. திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - 7.