கட்டளைக் கலித்துறை 535. | உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்,அன்றாயினிப்பால் நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்;நன் முத்(து)இடறித் திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கை,வன்றாள் வரைவந் துறுங்கடல் மாமறைக் காட்(டு)எம்மணியினையே. | | 16 |
வெண்பா 536. | மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை அணியமர ரோடயனும், மாலும், - துணிசினத்த செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று நஞ்சூட்ட எண்ணியவா நன்று. | | 17 |
என்றபடி பொடி ஆடும் - திருநீற்றில் மூழ்குகின்ற.‘பொடி ஆடும் நெற்றியையும், ஊர்கின்றவாளரவத்தையுடைய சடையையும் உடையவனே’ என்க. கடல்அலைகள் வந்து ஒற்றுதல் பற்றி, ‘ஒற்றியூர்’ எனப்பெற்ற பெயரைச் சிலேடையால் ஆசிரியர் பலரும்இங்ஙனம் நகைதோன்றக் கூறுவர். “ஒற்றியூரேல்,உம்மதன்று” என்றது முதலியன் காண்க. ஒற்றியூரைஊராகக் கொண்டதனைக் குறித்து நயம்படப்புகழ்ந்தவாறு. 535. குறிப்புரை: “நன் முத்து இடறி”என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. உரை வந்துஉறும் பதம் - பேச்சுக்கள் தடையின்றி வந்துபொருந்த (நன்றாய்ப் பேச முடிகின்ற) அந்தப்பருவத்தில் தானே (துதியுங்கள்). கலம் - மரக் கலம்வந்து உற - வந்து சேரும்படி கை - கைபோன்றனவும்.தாள் - முயற்சி; செயற்பாடு, முயற்சியை, முன் “கை”என்றதற்கு ஏற்ப, “தாள்” (கால்) என்றது சொல்நயம். வரை - மலை, “திரை வந்துறும்” என்பது கரைக்குஅடையாய், வேறுமுடிபாயிற்று மலை போலும் அலைகள்;உவமை யாகுபெயர். மணி - மாணிக்கம். இது காதற்சொல், ‘மணியினை உரைமின்கள்’ என்க. 536. குறிப்புரை:மணி அமரும் மாடம் -மணிகளை வைத்து இழைத்தமையால் அவை பொருந்தியுள்ளமாடங்கள். வாய்மூர் - திருவாய்மூர்த் தலம் அணி -வரிசை; கூட்டம். செஞ்சூட்ட சேவல் - சிவந்தகொண்டையை யுடைய சேவற் கோழி. அதனைக் கொடியாகஉடையவன் முருகன். ‘இவர்கள்’ எல்லாரும் ஒருங்குசேர்ந்து நின்ற நஞ்சு ஊட்ட எண்ணம் இட்டவாறு நன்று’எனப் பழித்த வாறு (அமரரும், அயனும், மாலும்தாங்கள் பிழைக்க நினைத்து எண்ணம் இட்டார்கள்;முருகன் ஏன் அதற்கு இசைய வேண்டும்’ என்பது கருத்து.‘இவர்கள் யாவராலும் சிவபெருமானது
|