பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை438

கட்டளைக் கலித்துறை

537.நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண்ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யா(து)அறி வீர்,செறிமின்;
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய்பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக்கொள்மின்களே.

18

வெண்பா

538.கொண்ட பலிநுமக்கும், கொய்தார்க்குமரர்க்கும்,
புண்டரிக மாதினுக்கும் போதுமே ? - மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய்ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.

19


நித்திய (அழிவிலா)த்தன்மை நன்கறியப்பட்டது) என்பது இதன் உண்மைப்பொருள். மேலேயும்,

மிடற்று ஆழ்கடல் நஞ்சம் வைக்கின்ற ஞான்றுமெல்லோதி நல்லாள்
மடற் றாமரைக் கைகள் காத்திலவே1

என இரங்கும் முகத்தால் இதனை விளக்கினார்.

537. குறிப்புரை: “குன்றைக் குறுவது....அறிவீர்” என்னும் தொடரை முதற்கண் கூட்டி உரைக்க.ஐக்கு நன்று உறும் இருமல் - கோழையைவெளிப்படுத்துதற்கு நன்கு பொருந்து வதாகிய இருமல்இருமலும், பெருமூச்சும் நண்ணுதல் முதுமைக் காலத்தில்.எனவே, “அவை நண்ணும் முன்னம்” என்றது, ‘இளமையிற்றானே’என்றதாம். ‘குறியது’ என்பது. எதுகை நயம் நோக்கி,“குறுவது” என வந்தது. ‘குறுவதாக’ என ஆக்கம்வருவிக்க. குன்றைக் குறுவதாகக் கொண்டு அழியாதுஅறிவீர் - மலையை (மலை போலப் பெரியதாகிய பயனை)ச்சிறியதாக நினைத்து இழந்து கெடாதவாறு, ஆவனவற்றைஅறியும் அறிவுடையவர்களே, கயிலாயத்தை அடைதல்அரியதொன்றாயினும் (அரிது’ என்து விட்டொழியாது)கயிலை நாயகனை உள்ளத்தில் நினையுங்கள். அதன்பயனாகப் பின் கயிலாயத்தில் செறியுங்கள். (சேருங்கள்).

538. குறிப்புரை: ‘பெருமானே’ என்பதைவருவித்து, “மயிரிழந்த” என்பது முதலாகத்தொடங்கி யுரைக்க. பலி - பிச்சை. புண்டரிகம் -புலி. அது சாதி பற்றிச் சிங்கத்தைக் குறித்தது.சிங்க வாகனத்தையுடைய மாது காளி. இனி, ‘அன்பர்இதயத் தாமரை’ எனினும் ஆம் குமரர் - பிள்ளைகள்விநாயகனும், முருகனும், ‘உயிர்


1. இந்நூல்- 2.