கட்டளைக் கலித்துறை 539. | வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ, வானவர்தம் அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந்தேனுழக்கிச் செந்தா மரைச்செவ்வி காட்டும் திருவடிக்குஞ்செல்லுமே. எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்டஇன்மலரே. | | 20 |
வெண்பா 540. | மலர்ந்த மலர்தூவி, மாமனத்தைக் கூப்பிப், புலர்ந்தும் புலராத போதும், - கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக்காண்பெளியன். தெண்ணீர் சடைக்கரந்த தே. | | 21 |
இழந்தார் மண்டிச் சேர் புறங்காடு' என்க. மண்டி -நெருங்கி. வெண்தலைவாய் - வெண்தலையின்கண்(கொண்ட பலி) 'பெருமானே, ஒரு தலை யோட்டளவில்நீர் கொண்டு செல்கின்ற பிச்சை உமக்கும், உம்பிள்ளைகள் இருவருக்கும், அம்மைக்கும் ஆகநால்வருக்கும் போதுமோ' என்க. 'எடுப்பதுதான்பிச்சையாயிற்றே; அதையாவது எல்லாருக்கும் ஆகும்படிபெரிய பாத்திரத்தைக் கொண்டு எடுக்கலாகாதோ'என்றபடி. இதனால், 'உங்களில் யாருக்கும் இந்தப்பிச்சை தேவையில்லாமை தெரிகின்றது' என்பதைக்குறிப்பாய் உணர்த்திப் பழிப்பது போலப்புகழ்ந்தவாறு. 539. குறிப்புரை: ஆறு - காவிரியாறு.'ஆறு வந்து அலைக்கும் வலஞ்சூழி' என்க. வானவ - கடவுளே'போதினின்றும் ஒழுகும் அழகி. தேன்' என உரைக்க."திருவடி களை, 'தாமரை' எனக் கூறுதல் தேனோடுபொலிதலால் உண்மையாகின்றது" - என்றபடி.எந்தாய் அடி - எந்தையாகிய உனது திருவடி. செல்லுமே -ஏற்குமோ பிடித்தல் - கண்டறிந்து பறித்தல்.'பறிந்திட்ட' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.'தேவர்களது கற்பக மலரைப் பொருந்தி விளங்கும்உனது திருவடிக்கு இங்கு மக்கள் தேடிக் கண்டு பறித்துஇடுகின்ற சில மலர்கள் ஏற்புடைய வாகுமோ' என்றபடி.'இன்மலர் செல்லுமே' என முடிக்க. 540. குறிப்புரை: "கூப்பி"என்பதனோடு இயைத்து முரண் நயம்தோன்றுதற்பொருட்டு "மலர்ந்த"என்றாராகலின் அதற்கு. 'மலரும் நிலையில் உள்ள'என்பதே பொருளாதல் அறிக. மா - குதிரை. கூப்பி -குவியப் பண்ணி. 'போது' என்பது, "புலர்ந்த"என்பதனோடும் இயையும் ஆதலின்,"புலர்ந்ததும்" என்றதற் கும்,'புலர்ந்தபோதும்"
|