பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை440

கட்டளைக் கலித்துறை

541.தேவனைப், பூதப் படையனைக், கோதைத்திருஇதழிப்
பூவனைக், காய்சினப் போர்விடை தன்னொடும்போற்றநின்ற
மூவனை, ஈருரு வாயமுக் கண்ணனை, முன்னுமறை
நாவனை நான்மற வேன்இவை நான்வல்ல ஞானங்களே.

22


என்பதே பொருள். புலர்ந்தபோது காலை நேரம்.புலராத போது - மாலை நேரம். கலந்து - அன்பால்உள்ளம் பொருந்தி. 'தே, தூவி, கூப்பி, கலந்திருந்துகண் நீர் அரும்பக் கசிவார்க் காண்பு எளியன்' எனஇயைத்து முடிக்க. 'அல்லாதார்க்கு எளியனல்லன்'என்பது கருத்து.

541. குறிப்புரை: "தேவன்"என்றது, தலைமை பற்றி, 'தேவ தேவன்; மகாதேவன்'என்னும் பொருட்டாய் நின்றது. கோதை - மாலை.'கோதையின்கண்' என ஏழாவது விரித்து, அதனை,"பூவன்" குறிப்பு வினைப் பெயரோடு முடிக்க,இதழி - கொன்றை. அடையாளப் பூவாதலின்"திருஇதழி" என்றார். விடை - இடபம். அதற்குக்காய் சினமும், போரும் இன அடையாய் வந்தன."போற்ற" என்றது, 'யாவரும் போற்ற' என்றபடிமூவன் - மூப்பவன் 'மூத்தவன்' என இறந்த காலத்தாற்கூறற்பாலதனை எதிர்காலத்தாற் கூறினார். எதிர்காலம் உணர்த்துவதில் லகர மெய்பகர மெய்யோடுஒக்கும் ஆதலின், ஈண்டு எதுகை நோக்கி வகரமெய்வந்தது. மூத்தவன் - பெரியோன்.

மூத்தானே, மூவாத முதலானே
விண்ணோர்க் கெல்லாம் மூப்பாய்1

என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார்."ஈருருவாய் முக்கண்ணன்" என்றதுஎண்ணலங்காரம். சிவபெருமானை, 'தேவன்' முதலிய பலபெயர்களால் கூறி, "நான் மறவேன்"என்றதனால், 'இன்னோரன்ன அவனது பெயர்களைமறவேன்' என்பதே பொருளாம். பெயர்கள் பலவாதல்பற்றி அவற்றை உணரும் ஞானங்களும் பலவாகக்கூறப்பட்டன. பிரித்துக் கூட்ட, "இவையே"எனவரும் பிரிநிலை ஏகாரத்தால், 'பிற ஞானங்களைநான் வல்லேனல்லேன்" என்பதைப் பிரிநிலைஎச்சத்தால் உணர்த்தி, 'பிற ஞானங்கள்வேண்டுவதில்லை' எனக் குறிப்பாற்புலப்படுத்தியவாறு.


1. திருவாசகம் - திருவேசறவு - 8, புணர்ச்சிப் பத்து -10.