பக்கம் எண் :

441சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

வெண்பா

542.நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும்; -வானவர்கள்
தம்பெருமான், மூவெயிலும் வேவச் சரந்தூற்றல்
எம்பெருமான் என்னா இயல்பு.

23

கட்டளைக் கலித்துறை

543.இயல்,இசை, நாடக மாய்,ஏழு வேலைக ளாய்,வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழுதாகிநின்ற,

542. குறிப்புரை: "வானவர்கள்தம் பெருமான்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. நல்குரவு - வறுமை. அஃது எங்குச் சென்றாலும்நீங்காமை நோக்கி, அது தனி நிற்பதொன்றாய்உடன் வந்து நிற்பது போலப் பான்மை வழக்காற்கூறினார். 'கடை - வாயில். கால் நிமிர்த்தல் - வலிதாங்கமையால் வளைத்தும், நிமிர்த்தியும்நிற்றல். "எம்பெருமான்" என்பதன் பின்,'துணை' என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.என்னாம, என்று நினையாமை. அவ் எம்பெருமான்என்பதில் கூட்டு, 'அத்தன்மையன்' எனப் பொருள்தந்தது 'எம்பெருமான் என்னாத அந்த இயல்பே இப்படிஇரந்து நிற்கும் நிலைமையைத் தந்தது' என்பதனை,'இயல்பு நாங்கள் இரத்தலைக் கண்டு,மகிழ்ந்துகொண்டிருக்கின்றது' என்றார்.'சிவபெருமானை ஏத்தாதவரே வறுமையாளராய் இரப்பர்'என்றல் கருத்து.

வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி, நந்

தாவனம்சூழ்

தேகை மாமலர் சூடிச்செல் வோரும், -

சிதவல்கற்றிக்

கால்நகம் தேயத் திரிந்(து) இரப்போரும்

கனக வண்ணப்

பால்நிற நீற்றற்(கு) அடியரும், அல்லாப்

படிறருமே1

எனச் சேரமான் பெருமாள் நாயனாரும் அருளிச்செய்தார்.

"இயல்பு, கண்டிருக்கும்"என்றதும் பான்மை வழக்கு.

543. குறிப்புரை:பின்னர், 'எழுகடலாய்' எனக் கூற இருப்பவர் அதற்கியைய முன்னர்'முத்தமிழாய்' எனக் கூறுகின்றவர்அம்முத்தமிழ்களையும் விதந்தோதினார். வேலை -கடல் வழுவா -


1. பொன்வண்ணத் தந்தாதி - 12.