| மயிலியல் மாமறைக் காடர்,வெண் காடர்,வண் தில்லை,மல்கு கயலியல் கண்ணிபங் காரன்பர் சித்தத்தடங்குவரே. | | 24 |
வெண்பா 544. | அடங்காதார் ஆரொருவர் ? அங்கொன்றை துன்று மடங்காதல் என்வளைகொள் வார்த்தை -நுடங்கிடையீர் ஊரூரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே ஆரூரன் செல்லுமா றங்கு. | | 25 |
எஞ்சாத (விண்ணும், மண்ணும்). புயல் இயல் விண் -மேகங்கள் உலவுகின்ற ஆகாயம். பொழுது - காலதத்துவம் "கடல்" என்றது உபலக்கண மாய்ஏனைக் கருப்பொருள் பலவற்றையும் குறித்தது.'தமிழ்ச் சொற்களையும் அவற்றின் பொருள்களையும்குறித்தது. எனவே, இறைவர் முதல், கரு, உரி ஆகியஅனைத்துப் பொருளுமாய் நிற்றல் கூறப்பட்டதாம்.ஆகவே, 'இங்ஙனம் விசுவத்திற்கு அந்தரியாமியாய்நிற்கும் பெரியோனாகிய பெருமான் அன்பர்சித்தத்தில் அடங்குவன்' வியந்தருளிச்செய்தவாறு. இப்பாட்டில் திருமறைக்காடு.திருவெண்காடு, திருத்தில்லை என்னும் தலங்கள்எடுத்தோதப்பட்டன. மயில் இயல் - மயில்கள்நடமாடுகின்ற. மா - பெருமை. 'கயல் இயல் மல்கு கண்ணி'என மாற்றி, 'மீனின் இயல்பு நிறைந்த கண்ணையுடையஉமாதேவி' என உரைக்க. 'பங்கர்' என்பதில் 'அர்(விகுதி நீக்கி, ஆர் விகுதி புணர்த்து, 'பங்கார்'என்றார். 'பங்கினார்' என்பதில் 'இன்' சாரியைதொகுக்கப்பட்டது எனினும் ஆம். 544. குறிப்புரை: 'நுடங்கிடையீர்; ஆரூரன், - உண்பலிக்கு - என்று அங்ஙனே ஊர் ஊரனாய்ச்சென்றக்கால், (அவன்) செல்லும் ஆறாகிய அங்குகாதலையுடைய என் வளைகளை (அவன்) கொண்டவார்த்தையினுள் அடங்காதாராக யார் ஒரு மகளிர்உளராவர்? (ஒருவரும் உளராகார்) என இயைத்து முடிக்க.'அவன் பலிக்குச் செல்லும் எவ்விடத்திலும் உள்ளமகளிர் யாவரும் அவன்மீது, கொள்ளும் காதலால்தங்கள் வளைகளை இழக்கவே செய்வர்' என்றவாறு.'நிலைமை இது வாகலின், யான் என் வளைகளை இழந்தமைபற்றித் தாய் முனிதல் தகுமோ' எனத் தனது வேறுபாடுகண்டு கழறிய தோழியரைக் கழற்றெதிர் மறுத்தாள்.இன்னொரன்ன துறைகள் கைக்கிளை பெருந்திணைகளில்வருதல் இயல்பு. அடங்குதல் - உட்படுதல். கொன்றைதுன்று மடம்காதல் என் வளை - கொன்றை மாலையைப் பெற வேண்டியமடமையையும், காதலையும் உடைய எனது வளைகள். "வாரத்தை" என்பதில், 'உள்' என்னும்பொருளில் வந்த கண் உருபு விரித்து, வார்த்தைக்கண்
|