பக்கம் எண் :

443சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

கட்டளைக் கலித்துறை

545.அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர்,தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந்திருநட்டமே.

26

வெண்பா

546.நட்டம்நீ ஆடும் பொழுதத்து, நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ! -அட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற, பேயின் கொடிறு.

27


அடங்காதார் ஆர் ஒருவர்' என மேலே கூட்டி முடிக்க.நுடங்கு துவள்கின்ற, 'ஊர் ஊரனாய்' என ஆக்கம்விரிக்க. ஆறு - வழி.

545. குறிப்புரை:அங்கை மறித்தவர்- வேள்வித் தீயில் ஆகுதி பண்ணுதற்குக் கைகளை மூடிவிரிப்பவர்கள் அந்தணர்கள் அவி - அவிப் பாகம்.தம் கை மறித்து அறியாதவர் - விரித்து இணைத்துக்குவித்த கைகளை மீட்க அறியாதவர். 'அறியாதவராய்'என ஆக்கம் விரிக்க. 'எப்பொழுதும்கும்பிட்டுக்கொண்டயிருப்பவராய்' என்றபடி. கங்கைமறித்து - கங்கை நீரைத் தடுத்து வைத்து. அணவாப் பணமாசுணம் - சுருக்கிச் சுருக்கி உயர எடாமல்,(எப்பொழுதும் உயர எடுத்து ஆடிக்கொண்டே)இருக்கின்ற படத்தை யுடைய பாம்பு. செங்கை மறித்து -சிவந்த கையை (அஞ்சலீர் என) அமைப்பதாகக் காட்டி'தாழ் சடையில் கங்கையை மறித்து வைத்து, மாசுணக்கங்கணத்தின் கையை மறித்துச் சிவன் இரவில்ஆடும் திருநட்டம் வானவர்கள் தம் கைமறித்தறியராய்த் தொழுதே நிற்பர்' என இயைத்துமுடிக்க, இரவாவது, ஊழி யிறுதிக் காலம். நட்டம்,புனர் உற்பவத்திற்கு ஆவனவற்றைப் புரியும் சூக்கும்நடனம். "வானவர்கள்" என்றதனால், இங்கு 'இரவு'என்றது நில உலகத்து ஊழியை.

546. குறிப்புரை: "அட்டு"என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. "பொழுது"என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. இலயம்கொடுத்தல் - தாள அறுதிக்கு ஏற்ப முழக்குதல். ஒழி,துணிவுப் பொருண்மை விகுதி. கொல், அசை, ஓகாரம்,ஐயப் பொருட்டு. அட்டு - கொன்று. கடுங்குன்ற மால்யானை - பெரிய மலைபோலும் மத யானை. கார் உரிவை -கறுத்த தோல். கொடுங்குன்றம், பாண்டி நாட்டுத்தலங்களுள் ஒன்று. "கொடுங்குன்ற" என்பது விளி.'உன்னுடைய பேயின் கொடிறு' என்க.