கட்டளைக் கலித்துறை 547. | கொடிறு முரித்தனன் கூலாளன்; நல்லன்,குருகினஞ்சென்(று) இடறுங் கழனிப் பழனத் தரசை; எழிலிமையோர் படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம் மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே. | | 28 |
வெண்பா 548. | விதிகரந்தவெவ்வினையேன் மென்குழற்கே,வாளா, மதுகரமே, எத்துக்கு வந்தாய்? -நதிகரந்த, |
கொடிறு - தாடை முழவு முதலியவற்றைத் தாள அறுதிதோன்ற முழக்கும் பொழுது வாய்ச் செய்கையால்தாடை குழிதல் உண்டு. பேய்கட்கு இயற்கை யாய் உள்ளதாடைக் குழியை இங்ஙனம் செய்கையால் நேர்ந்தனபோலக்கூறி நகைத்தவாறு. 'உனது கூத்திற்குக் கொட்டிமுழக்கப் பேய்கள் தவிரப் பிறர் இல்லையோ' எனநகை தோன்றக் கூறியதாம். 'ஒடுக்கக் காலத்தில்இறைவனைச் சார்ந்து நிற்கும் உயிர்களேஅவ்விடத்து உள்ளன' என்பது இதன் உண்மைப் பொருள். 547. குறிப்புரை:கூறாளன் - ஒருபாதியில் இருப்பவனும். நல்லன் - நற்குணம்(சாத்துவிக குணம்) உடையவனும் ஆகிய திருமால் (அவ்வாறு இருந்து கொண்டே) கொடிறு முரித்தனன் -எங்கள் பெருமானுடைய கழுத்தை முரித்து விட்டான்.(இது, கூடவே யிருந்துகொண்டு குழிபறித்தான்'என்னும் பழமொழிக்கு ஒப்பாயிற்று - என்பதாம்.) கொடிறு,ஆகுபெயர். குருகு - நீர்ப் பறவை. பழனம்,'திருப்பழனம்' என்னும் சோழ நாட்டுத் தலம்.'பழனத் தாசைக் கொடிறு முரித்தனன்' என்பதை,'யானையைக் கோட்டைக் குறைத்தான்' என்பது போலக்கொள்க. படிறு மொழிந்து - கபட்டுரை கூறியது. அது, 'தேவயாகத்தில் முதற் பங்கு உம்முடையதே யன்றோ?அதனால், தேவ காரியமாகப் பாற்கடலைக்கடைந்ததில் முதலில் தோன்றியது உமக்குத் தானேஆக வேண்டும்?' எனக் கூறியது. விதி, இங்கு நல் ஊழ்.'மிடறு தடுத்திராது விடில் நாங்கள எங்கள் தலைவனைஇழந்திருப்போமன்றோ' என்றபடி. இவ்வாறு,தேவர்களது தந்நலத் தன்மையையும், அநித்தியத்தன்மையையும், சிவபிரானது பெருங்கருணைத்திறத்தையும், நித்தியத் தன்மையையும் குறிப்பாற்கூறிவியந்தவாறு. பரவை -கடல். 548. குறிப்புரை: 'மதுகரமே,கொட்டுக்கு ஆட்டான் சடைமேல் கொன்றைத் தெரியல் தொட்டுக் காட்டாய்;தொக்குச்சுழல்வாய்;
|