பக்கம் எண் :

445சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

கொட்டுக்காட் டான்சடைமேற் கொன்றைக்குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்;சுழல்வாய் தொக்கு.

29

கட்டளைக் கலித்துறை

549.தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணித்தேநிலவு
நக்கு வருங்கண்ணி குடிவந் தார்;நறும்புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும்; போதரைக் காண வெள்குவனே.

30

வெண்பா

550.வெள்காதே, உண்பலிக்கு வெண்டலைகொண்டூர்திரிந்தால்,
எள்காரே வானவர்கள்? எம்பெருமான், - வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.

31


வாளா, எத்துக்கு வினையேன் மென் குழற்கேவந்தாய்?' என இயைத்து முடிக்க. விதி - பிரம தேவன்.கரந்த வினை - மறைந்து வகுத்த பிராரத்துவ கன்மம்.குழற்கே - கூந்தலின்கண்; உருபு மயக்கம். மதுகரம் -வண்டு, 'எற்றுக்கு' என்பது, 'எத்துக்கு' என மருவிவந்தது. 'நதி கரந்த சடை' என இயையும். கொட்டுக்குஆட்டு. மத்தளம் முதலிய கொட்டுக் களுக்கு இயையஆடும் நடனம். தெரியல் - மாலை. தொட்டு - கிளறி.'அதன் நறுமணத்தைக் கொண்டுவந்து காட்ட மாட்டாய்என்க. 'மாலயைப் பெறாவிடினும் மணத்தையேனும்பெற்றால் 'ஆற்றலாம்' என்பது கருத்து. தொக்கு - வேறுபல வண்டுகளோடும் கூடி. இஃது, ஆற்றாமை மீதூர்வால்தலைவி வண்டினை நோக்கிக் கூறிய, காமம் மிக்ககழிபடர் கிளவி.

549. குறிப்புரை: 'ஐயாறரைக் காணஅம்பு மிக்கு வாழும்; (அவர்) வந்தார்; காணவெள்குவன்' என இயைத்து முடிக்க. தொக்கு - கூடி கணம் -பூத கணம். 'நிலவாகிய கண்ணி, நக்கு வரும் கண்ணீ'எனத் தனித்தனி இயைக்க. நக்கு - ஒளி வீசி. கண்ணி -முடியில் அணியும் மாலை. புன்னை - புன்னை மலர்;ஆகுபெயர். அக்கு - சங்கு கானல் கடற்கரைச்சோலை,ஐயாறு, சோழ நாட்டுத் தலங்களில் ஒன்று. அரும்போதர் - அரியஞான சொரூபர், இஃது இங்கு, 'அவர்'என்னும் சூட்டுப் பெய ரளவாய் நின்றது. இதுதலைவிதன் நாண் அழிவு கூறித் தோழியைவரைவுகடாவுவித்தது.

550. குறிப்புரை: "எம்பெருமான்" என்பது விளி. அது முதலாகத்தொடங்கி, 'வானவர்கள் எள்காரே' என முடிக்க. 'வல்'என்பது அடியாக 'வல்கு' எனப் பிறந்த பண்புப் பெயர்.'வள்கு'எனத் திரிந்து