கட்டளைக் கலித்துறை 551. | கூறு பெறுங்கன் னி சேர்கருங் கூந்தல்சுண்ணந்துதைந்து, நீறு பெறுந்திரு மேனி நெருப்புப்புரைபொருப்பொத்(து) ஆறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன்துவலைசிந்த வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்குவெண்ணிறமே. | | 32 |
'ஊர்' என்பதனோடு புணர்ந்து, கோவலூரைஉணர்த்திற்று. அவ்வூர் விரட்டமே, "வடதிருவீரட்டானம்" எனப்பட்டது. தென் - தென்வீரட்டம்;திருவதிகை. குட திருவிரட்டானம் - மேற்கேயுள்ளவீரட்டானம்; திருக்கண்டியூர். கூறு - பங்கு. 'இவைபோல எத்தனையோ வீரட்டானம் உம்முடைய பங்காய்இருக்க, நீர் 'பிச்சைக்கு' என்று வெண்தலை கொண்டுஊர் திரிந்தால், வானவர்கள் ஏற்காரே?' என்க.'வானவர்கள் நீர் இரப்பதன் உண்மையைஅறிவார்கள் ஆகையால் எள்கிற்றிலராய், உம்மைவணங்குவர்' என்பது குறிப்பு. "அவனும் ஓர் ஐயம்உண்ணி; அதன் ஆடையாவது...... கலனாவது ஒடு கருதில் -அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும் அகன்நேர்வர் தேவரவரே"1 என்னும் அப்பர்திருமொழியையும் காண்க. 551. குறிப்புரை: 'எம்பிரானுக்குவெண்ணிறம். துதைந்து, ஒத்து, சிந்த வீறு பெறும்' எனஇயைத்து முடிக்க. கூறு பெறுங் கன்னி. திருமேனியில் ஒருகூற்றைப் பெற்று விளங்கும் கன்னிகை; உமை. சுண்ணம்- பொடி; திருநீறு. துதைந்து - மூழ்கப் பெறுதலாலும்,'நீறு பெறும் நெருப்புப் புரை திருமேனி நெருப்பு ஒத்து'என மாற்றி, 'நீறு பூத்த நெருப்பை ஒத்த திருமேனிமலைபோலத் தோன்றுதலாலும்' என உரைக்க. 'கொன்றைஅம் தேன் திவலையைச் சிந்தவும்' என்க. கொன்றை -கொன்றைப் பூ; ஆகுபெயர். சென்று சென்று வீறுபெறும்.தொடர்ச்சியாக விளங்கி விளங்கிப் பெருமைபெறும். 'கண்ணி, பெருங் சடை' என்பன பாடம் அல்ல.செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்து, காரணப்பொருளவாய் நின்றன. 'பெருமானது பெரிய திருமேனிமுழுதும் திருநீற்றால் விளங்குகின்ற வெண்ணிறம்அதன்மேல் உமாதேவி தன் கூந்தல் விழுதலால்கருநிறத்தைச் சிறிது பொருந்தியும்,சடையினின்றும் தேன் துளித் துளியாகச் சிந்துதலால் பல புள்ளிகளைப் பெற்றும் மேலும் மேலும் அழகுபெறுகின்றது' என அதனை வியந்துவாறு. பல நிறங்கள்ஒன்று கூடுதலை அழகுடையதாக மதிப்பர்.
1. திருமுறை - 4.8.1.
|