வெண்பா 552. | நிறம்பிறிதாய், உள்மெலிந்து, நெஞ்சுருகி,வாளா புறம்புறமே நாள்போக்கு வாளோ! - நறுந்தேன் படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக் கொடுமுடியாய், என்றன் கொடி. | | 33 |
கட்டளைக் கலித்துறை 553. | கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட,கோளரவம் பிடிக்கில அம்முடிப்; பூணலை; யத்தொடுமால்விடையின் இடிக்குரல் கேட்(டு)இடி என்றிறு கக்கடிவாளெயிற்றால் கடிக்க லுறுமஞ்சி, நஞ்சம் இருந்தநின்கண்டத்தையே. | | 34 |
552. குறிப்புரை: "நறுந்தேன்"என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. தேன்படும்முடியாய் - மலர்கள் தேனைச் சிந்துகின்ற முடியினை(தலையை) உடையதாய். பாண்டிக் கொடுமுடி, கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்று. கொடி -கொடிபோல்வாளாகிய பெண்; உவமையாகுபெயர். வாளா -யாதொரு பயனையும் பெறாது புறம் புறமே - பெரிதும்தொலைவில் நின்று; அடுக்கு, மிகுதி பற்றி வந்தது.ஒகாரம் இரக்கப் பொருட்டு. அதனால், 'நீஇரங்காயோ' என்பது பெறப்படும். இது தலைவியதுநிலைமை பற்றித் தோழி செவிலிக்கு அறத்தொடுநின்ற பின்பு செவிலி இறைவனாகிய தலைவனைஎதிர்பெய்துகொண்டு, இரங்கிக் கூறியது. 553. குறிப்புரை: 'வீரட்ட, அரவம்அம் முடிப் பிடிக்கில்; அத்தொடு விடையின்குரல்கேட்டு இடி - என்று அஞ்சி நின் கண்டத்தைஅடிக்கடி இறுக்கக் கடித்தலுறும். (ஆகையால்அவற்றைப்) பூணலை' என இயைத்து முடிக்க. 'கொடியை யுடையமதில், குலம் மதில்' எனத் தனித்தனி இயைக்க.குலவுதல் - விளங்குதல். "குலவும் மதில்" என்பதில் மகர ஒற்று விரித்தல். பிடித்தல் -போதுமானதாக அமைதல். முடி பெரியதாய் இருத்தலின்அதை முழுவதுமாகச் சுற்றுதற்குச் சிறிதான பாம்பு,போதவில்லை' என்றபடி, 'அதனோடு' என்பு. 'அத்தோடு'என மருவிற்று. 'இவ் இருகாரணம் பற்றியேனும் அரவம்பூணுதலை விடு' என வேண்டியதாம
|