வெண்பா 554. | கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக்கருங்கடல்நஞ்(சு) உண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் -தொண்டடைந்தார் கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை, பேசுவரே மற்றொருவர் பேச்சு. | | 35 |
கட்டளைக் கலித்துறை 555. | பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடுகாட்டயலே தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்?செப்பு;முப்பொழுதும் கோச்சுற்ற மாக்குடை வானவர் கோன்,அயன்மால்முதலா மாச்சுற்றம் வந்திறைஞ் கந்திருப் பொற்சடைமன்னவனே. | | 36 |
554. குறிப்புரை: 'உத்தமற்குத் தொண்டுஅடைந்தார் கூற்றைக் கூசுவரே? தீக் கொடுமை,.குறுகுவரே? மற்றொருவர் பேச்சுப் பேசுவரே? வினாப்பொருளில்வந்த ஏகாரங்கள் அவை நிகழாமையைக்குறித்தன. கவ்வை - ஆரவாரம். 'புரிந்ததும்' என்னும்உம்மை தொகுக்கப்பட்டது. உகந்த (அதனைஉண்பித்தவர்களை வெறாமல்) விரும்பிய, உத்தமன் -மேலானவன், 'தொண்டாய் அடைந்தார்' என ஆக்கம்விரிக்க. கூசுதல் - நாணுதல். அஃது இங்கு அஞ்சுதலின்மேற்று. தீ - தீமை அது துன்பத்தைக் குறித்தது.கொடுமை - அடையலாகாதவை. 'தீயவையாகியகொடுமையைக் குறுகுவரே' - என்க. மற்றொருவர் பேச்சு -பிறர் ஒருவரைப் பற்றிய பேச்சு 'உத்தமன்பேச்சையன்றிப் பிறர் பேச்சைப் பேசார்'என்றபடி. 555. குறிப்புரை: "முப்பொழுதும்" என்பதுமுதலாகத் தொடங்கியுரைக்க. கோச் சுற்றம் ஆ -அரசனுக்குரிய பரிவாரங்கள்போல. 'இடுகாட்டு ஆடல்'என இயையும். 'இந்திரன் அயன், மால் முதலிய மேலானதேவர்களும் முப்போதும் வந்து வணங்க நிற்கின்றநீ இடு காட்டில் ஆடல் என்? செப்பு என வினை முடிபுசெய்க. ஆம்,, அசை, 'இடுகாடு' எனப்படுவது, உலகர் தம்இளைஞரை இடுகின்ற காடு அன்று; உலகம் அனைத்தும்ஒடுங்கிய நிலையில் காரண மாத்திரையாய்நிற்கின்ற மாயையே - என்பது கருத்து. அதனால்,"பேய்" எனப்படுவனவும் ஒடுக்கக் காலத்துயாதோர் உடம்பும் இன்றி, மாயையில், பிரளய கேவலநிலையில் இருக்கும் உயிர்களே - என்பதும்பெறப்படும்.
|