வெண்பா 556. | மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து; வாளரக்கன் துன்னுங் சுடர்முடிகள் தோள்நெரியத் - தன்னைத் திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள்வைத்தான் திருச்சத்தி முற்றத்தான் தேசு. | | 37 |
திருச்சிற்றம்பலம் (இப்பிரபந்தத்தில் இதற்குமேல் உள்ளபாடல்கள் கிடைத்தில)
556. குறிப்புரை: "மன்னும்பிறப்பறுக்கும் மாமருந்து" என்பதை யிறுதியிற்கூட்டி யுரைக்க. வாள் அரக்கன் கொடிய இராக்கதன்;என்றது இராவணனை. "சுடர் முடிகள்" என்பதுஅடையடுத்த ஆகுபெயராய். அவற்றை யணிந்த தலைகளைக்குறித்தன. முடிகள், தோள்கள் செவ்வெண். "திருச்சத்தி" இரண்டில், முதலாவது என்றும்மாறாதுநிற்கும் செல்வமாகிய ஆற்றல். ஈற்றடியில் உள்ள"திருச்சத்தி முற்றம்", சோழநாட்டுத்தலங்களில் ஒன்று, "தன்னைத் திருச்சத்தி முற்றஎன்றது, 'தன்னை (அவ் அரக்கன்) என்றும் நிலையானபேராற்றலை உடையவனாக நன்கு உணருமாறு' என்றபடி.சித்தத்துள் வைத்தான் திருவுள்ளத்தில்நினைத்தவன். என்றது, நினைத்துக் கால் விரலால்ஊன்றியன்' என்றதாம். தேசு - ஒளி; அருள்.'அரக்கனைத் தன்னை உணருமாறு செய்தவனும், திருச்சத்திமுற்றத்தில் உள்ளவனும் ஆகிய அவனது அருளே,பலகாலமாய் நீங்காதிருக்கின்ற பிறவியாகியநோயை நீக்கும் பெரிய மருந்து' என முடிக்க. சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை முற்றிற்று.
|