பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை450

கபிலதேவ நாயனார்

அருளிச் செய்த

22. சிவபெருமான் திருவந்தாதி

வெண்பா
திருச்சிற்றம்பலம்

557.ஒன்று முதலாக. நூறளவும் ஆண்டகள்வாழ்ந்(து)
ஒன்றும் மனிதர் உயிரையுண்(டு) - ஒன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான், வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.

1


557.குறிப்புரை: "ஒன்றுமுதலாக நூறளவும் ஆண்டுகள்" என்றது, 'இடைப்பட்டஎந்த ஆண்டிலும் கூற்றுவன் வருவான்; அதற்குத்தடையில்லை' என்றபடி, 'மக்கள் வாழ்நாளின் மேல்எல்லை நூறு ஆண்டு' என்பதையும் பெரும்பான்மைபற்றிக் குறித்தார். ஒன்றும் மனிதர் - உலகில்பொருந்தியுள்ள மனிதர் 'ஒன்றையும் மதியாத' எனஉருபு விரிக்க. இதில் "ஒன்று" என்றது,'உயர்ந்ததாயினும், அன்றி, இழிந்த தாயினும்'என்றபடி. "ஒன்று" என்னும் எண்ணுப் பெயர்எண்ணப்படும் காரணத்தின் மேல் நின்றது. உம்மை,முற்று. அடியையும், இடப்பக்கத்தையும் கூறியதனால்,மதி, முடிவில் உள்ள மதியாயிற்று. "இடப்பக்கம்மால்" என்றது, அரியர்த்தேசுர வடிவம், அல்லதுசங்கர நாராயாண வடிவத்தை. கற்பத் தொடக்கங்கள்பலவற்றில் சிவபெருமான் சிலபொழுது தனதுஇடப்பகத்தில் மாயோனைத் தோற்றுவித்து, அதன்வழியாகப் பிரமனைத் தோற்று வித்து உலகத்தைப்படைக்கச் செய்வான். சில பொழுது இடப்பகத்தில்மாயோனோடு கூடவே வலப்பக்கத்தில் பிரமனையும்தோற்றுவிப்பான். சில பொழுது வலப்பக்கத்தில்பிரமனைத் தோற்றுவித்து. அவனைக் கொண்டேமாயோனைப் படைப்பிப்பான். அவற்றுள் "இடப்பக்கம் மால்" என்று மட்டும் கூறிப்போயினமையால் இது, பின்பு மாயோனைக் கொண்டுபிரமனைத் தோற்றுவிக்கும் முறையைக் குறித்தது.இங்குக் கூறியவைகளை.

அயனைமுன் படைத்திடும் ஒருகற்பத்(து);

அரியைமுன் படைத்திடும் ஒருகற்பத்(து);

உயர் உருத்திரன் றனைமுனம் படைப்பன்

ஒருகற்பம்; மற்றொருகற் பந்தன்னில்