558. | மாலை ஒருபால் மகிழ்ந்தானை, வண்கொன்றை மாலை ஒருபால் முடியானை, - மாலை ஒளியானை, உத்தமனை, உண்ணாநஞ் சுண்டற்(கு) ஒளியானை, ஏத்தி உளம். | | 2 |
மூயலும் மூவரை ஒருங்குடன் படைப்பன்; | முன்பி றந்தவர் மற்றிருவரையும் | செயலி னாற்படைக் கவும் அருள் புரிவன் | சிவபிரான் எனில்,ஏற்றமிங் கெவனோ |
என்னும் சிவதத்துவ விவேகத்தால்1 உணர்க. "முன்பிறந்தர் மற்றிருவரையும்...... படைக்கவும்அருள்புரிவன்" என்றதனால், 'அஃதே நியதியன்று;ஒருகற்பத்தில் சிவபிரான் தானே மூவரையும்படைத்தல் உண்டு' என்பது போந்தது. இங்கு 'அயன்,மால்' என்பவரோடுகூட உருத்திரனையும் குறித்தமையைஉணர்பவர்க்கு. நான்முகனை நாரா யணன்படைத்தான்; நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்2 என்றது ஒரோ ஒரு கற்பத்தில் நிகழும்நிகழ்ச்சி. என்பதும், அதுதானும் மூவருள் ஒருவனாகியஉருத்திரனைக் குறிப்ப தன்றி, மூவர்க்கும் மேலான்நான்காமவனாகிய சிவபிரானைக் குறியாது.ஒருகற்பத்தில் பிரமனுக்குப் படைத்தல்தொழிலைச் செம்மையாக உணர்த்துதற் பொருட்டுஅவனது நெற்றி யினின்றும் தோன்றிய நீலலோகிதன்முதலிய உருத்திரர் பதினொருவரே எங்கும் 'ஏகாதசருத்திரர்' எனக் குறிக்கப் படுகின்றனர்.'இங்ஙனம் சிவ புண்ணிய மிகுதியால் சிவபிரானதுஉருவம், பெயர், தொழில் இவைகளைப் பெற்றுநிற்கின்ற உருத்திரர்களே சிற்சில இடங்களில்பிரம விட்டுணுக்களினும் கீழ்ப்பட்டவர்களாகக்கூறப்படுகின்றனர்" என்பதையறியாமல் சிவனையேபிரம விட்டுணுக்களுக்குக் கீழ்ப்பட்டவனாகஎண்ணுதல் தவறுடையதாதல் அறிக. பிரமனை, 'சாக்கிரமூர்த்தி' என்றும், விட்டுணுவை, 'சொப்பன மூர்த்தி'என்றும் கூறுதல் பலர்க்கும் உடன்பாடு.அந்நிலையில் சைவாகமங்கள் சிவனைஇம்மூவர்க்கும் அப்பாற்பட்ட 'தூரிய மூர்த்தி'என்றே கூறுதல் குறிக்கொளத் தக்கது. "மால்"என்னும் எழுவாய், 'உளன்' என எஞ்சி நின்றபயனிலையோடு முடிந்தது. இவ்வந்தாதியின் எல்லாப்பாடல்களும் சொற் பின்வருநிலையணி பெற்று வருதல்காண்க. 558. குறிப்புரை:இரண்டாவதாக வந்த"ஒருபால்", இடப்பக்கம் 'அப்பக்கத்தில்கொன்றை மாலையைச் சூடான்' என்றது, அஃது
1. சிவஞான போத மாபாடியம் - அதி - 2. 2. திவ்வியப் பிரபந்தம் - நான்முகன்திருவந்தாதி - 1.
|