பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை452

559.உளம்மால்கொண் டோடி ஒழியாது, யாமும்
உளமாகில், ஏத்தாவா றுண்டே - உளம்மாசற்(று)
அங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.

3

560.அடியார்தம் ஆரூயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான்; - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி,
அந்தரத்தார் சூடும் அலர்.

4


அம்மையது பாகம் ஆதலைக் குறித்தது. இறுதிக்கண்வந்த மாலை. அந்திக் காலம். அது கால ஆகுபெயராய்.அது பொழுது தோன்றும் செவ்வானத்தைக் குறித்தது.உண்ணா - உண்ணப்படாத, ஒளியான் - பின் வாங்கிமறையாதவன். "ஏத்தி" என்பது தகர ஒற்றுப்பெறாது வந்த இகர ஈற்று ஏவல் வினைமுற்று.'துதிப்பாயாக' என்பது பொருள். "உளம்"என்பதை முதலிற் கூட்டி முடிக்க. 'உண்ணா நஞ்சுஉண்டல்' என்றது முரண்தொடை.

559.குறிப்புரை: "யாமும்"என்பதை முதலிலும், "எத்தாவாறு உண்டே"என்பதை இறுதியிலும் கூட்டி யுரைக்க. "உளம்"மூன்றில் இடையது தன்மைப் பன்மைக் குறிப்புவினைமுற்று; ஏனையவை, 'மனம்' எனப்பெயர்."ஆகில்" என்பது தெளிவின்கண் வந்தது. 'நாமும்மற்றவர்கள் போல மன மயக்கங்கொண்டு ஓடி ஒழியாது,நிலைபெற்றிருக் கின்றோம் என்றால், நாம்(முற்பிறப்பில்) சிவபெருமானது, திருவடிகளைதுதியாதிருந்தது உண்டோ' என்பது இதன் திரண்டபொருள். ஏகார வினா, எதிர்மறைக் குறித்தது.அங்கம் - உடம்பு, 'மலம் - மாசு. உள்ளமும் மாசற்று,உடம்பும் மாசற்று விளங்கும் ஏறு' என்க. அறக் கடவுளேவிடையா தலையும், அதன் நிறம் வெண்மை யாதலையும்இவ்வாறு குறித்தார். அம் கமலம் - அழகிய தாமரைமலர். இது செந்தாமரை மலர்.

560.குறிப்புரை:மார்க்கண்டேயர் வரலாற்றைக்குறிப்பிடுகின்றவர்அதில் உள்ள சிவபெருமானதுநேர்மையை விளக்குதற்கு, 'அடியான்' என ஒருமையாற்கூறாது, "அடியார்" எனப்பன்மையாற் கூறினார்.அட்டு - கொன்று. அழித்தல் - செயற்படாதபடிசெய்தல். "அந்தரத்தார்" என்பதைமூன்றாவதாய் உள்ள "அடியார்" என்பதற்குமுன்னே கூட்டி, 'அதன் கண், 'அடியாராய்' என ஆக்கம்விரித்து, 'சூடும் அவர்களை யுடைய அடியால் செற்றான்'என முடிக்க. "அருவாக" என்றது, 'தூலஉடம்பைஇழக்கும்படி' என்றதாம். அம்தரத்தால் ஏத்தி -அழகிய, மேலான குணத்தால் துதித்து. 'மந்திரத்தால்'என்பது பாடம் ஆயின் மடக்கணிக்குச் சிறிதும்இடம் இல்லாது போதலால் அது பாடம் அன்று.