561. | அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்(கு) அலராகி யானும் அணிவன்; - அலராகி ஒதத்தான் ஒட்டினேன்; ஓதுவன்யான், ஒங்கொலிநீர் ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர். | | 5 |
562. | ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே ஊரும் விடையொன்(று) உடைதோலே, - ஊரும் படநாகம் மட்டார் பணமாலை ஈதோ படநாகம் அட்டார் பரிசு. | | 6 |
561.குறிப்புரை; இப்பாட்டு,திருவாரூர்ப் பெருமான்மேல் காதல்கொண்டாள்ஒருத்திதன் கூற்று. "அலர் ஆளும் கொன்றை"என்பதை, 'கொன்றை ஆளும் அலர்' என மாற்றிக்கொள்க. கொன்றை - கொன்றை மரம். அதனால் ஆளப்படுதல், பூத்து அசையச் செய்தல். அணியல் - அணிதலைஉடைய. 'அலர் அணிந்த ஆரூரனைக் காதலித்ததனால்யானும் எங்கும் அலர் உடையேனாயினேன்' எனச் சொல்நயம்படக் கூறி இரங்கியவாறு இவ் அலர் இரண்டனுள்முன்னது மலர்; பின்னது, ஊரார் கூறும் பழிச்சொல்.மூன்றாவதாகிய அலர் - பரந்து செல்லுதல். 'நாண்இழந்து, எங்கும் பரந்து செல்லும் செலவினைஉடையேனாய்' என்க. "ஓதத்தான்" இரண்டில்முன்னதில் தான், அசை. ஓத ஒட்டினேன் -நிகழ்ச்சியை வெளிப்படுத்தத் துணிந்துவிட்டேன்'அதன்படி இனியான் நஞ்சுண்டானது ஊரைப் பலர்க்கும்ஓதுவன்' (வெளிப்படச் சொல்வன்) என முடிக்க. ஓதம்,பின்னது அலை, அஃது ஆகுபெயராய்க் கடலைக் குறித்தது.அதன்பின் வந்த 'ஆன்' உருபுஏழாவதன் பொருட்டாய்நின்றது. 562.குறிப்புரை:இவ்வெண்பாவும் பழிப்பது போலப்புகழ்ந்தது."ஊரும் விடை" என்பதில் பெயரெச்சம் செயப்படுபொருட்டாயும், "ஊரும் நாகம்" என்பதில்பெயரெச்சம் வினைமுதற் பொருட்டாயும் நின்றன."ஊரும் விடை ஒன்று" என்றது, 'ஊர்தியாகக்கொள்ளப்பட்டது யானை, குதிரை முதலியன அல்ல;காளையே அதுவும் ஒன்று தவிர, இரண்டாவதில்லை'என்றபடி. "தோலே என்னும் பிரிநிலைஏகாரங்களால் நற்கலங்களும் நல் உடைகளும்பிரிக்கப்பட்டன. பட நாகம் மட்டு ஆர் பண் அம்மாலை - படத்தையுடைய பாம்பும், தேன் பொருந்தியஅத்தியமே அழகாகச் செய்யப் பட்ட மாலைகள்.நாகம் பட அட்டார் - யானை (கயாசுரன்) அழியும்படிஅழித்தவர். பரிசு தன்மை 'அவர் தன்மை இதுதானோ'என்க.ஓகரம் இழிவு சிறப்பு.
|