பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை454

563.பரியானை ஊராது, பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ்; நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.

7


564.கண்டங் கரியன்; உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன்; கரிகாடன்; - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக்(கு), என்னுள்ளம்
படியாக் கொண்ட பதி.

8


565.பதியார் பழிதீரா; பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார்;அஃதேகொல்,
அம்மானார் கையார் அறம்!

9


563.குறிப்புரை: முதற்கண் உள்ள"பரியானை" என்பதில் 'பரிய' என அகரம்தொகுக்கப்பட்டது. இரண்டாம் அடியில் முதற்கண்நின்ற பரி - ஊர்தி. பாவித்தல் - நினைத்தல்.நினைத்தல் செய்யாதவர்க்குப் பரியான் - அருளான்."கட்டங்கம்" இரண்டில் முன்னது 'கட்வாங்கம்'என்பதின் திரிபு, 'மழு' என்பது பொருள். பின்னது,கட்டு அங்கம் - மாலையாகக் கட்டப்பட்ட எலும்பு,நெஞ்சே பரியானை கட்டங்கம் ஏந்தியாகக்கண்டும், கட்டு அங்கம் ஏந்தியாகக் கண்டும் வாழ்'என முடிக்க.

564.குறிப்புரை: "கண்டங்கள் பாடி ஆட்டாடும்" என்பது முதலாகத்தொடங்கி, "சோதிக்கு" என்பதனோடு இயைய,"பதி" என்பதிலும் 'பதிக்கு' என,தொகுக்கப்பட்ட நான்காவது விரித்துரைக்க,முதற்கண் நின்ற கண்டம் கழுத்து; மிடறு. 'உமைபாலினையும், தன் பாலினையும் கண்டு' எனஇரண்டிடத்தும் இரண்டாவது விரிக்க. "கண்டு"என்னும் எச்சத்திற்கு முடிவாகிய 'உணர' என்பதுதொகுத்தலாயிற்று. அங்கு - அவனிடத்து 'உமையொருபாகமாகிய திருமேனியை யுடையனாயினும் அவனருள்பெற்றார்க்கன்றிக் காண இயலாதவன்' என்பதாம்.இறுதியில் நின்ற கண்டம், 'குரல்' என்னும் பொருளது. 'இக்குரல், பூத கணங்களின் குரல்' என்க. ஆட்டு ஆடும் -பலவகை ஆட்டங்களை ஆடுகின்ற. பின் நின்ற பாடி -பாசறை; தங்குமிடம் பதி - தலைவன்.

565. குறிப்புரை:பதியார் பழி -ஊரில் உள்ளவர்கள் தூற்றும் அலர்கள். தீரர் -ஓழிகின்றில. 'என்பது' என்னும் சொல்லின் ஈற்றுக்குற்றியலுகரம் யகரம் வரக் குற்றிய லிகர மாய்த்திரிது முற்றியலுகரம் போல அலகு பெற்றது. 'என்பதுசொல்லி யான் இரக்கும்படி' என,