566. | அறமான நோக்கா(து) அநங்கனையும் (செற்றங்(கு) அறமாநஞ் கண்ட அமுதன் - அறல்மானும் ஓதியான் பாகம் அமர்ந்தான் உயர்புகழே ஓதியான் தோற்றேன் ஒளி. | | 10 |
567. | ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு) ஒளியான் உலகெல்லாம் ஏத்த - ஒளியாய கள்ளேற்றான், கொன்றையான் காப்பிகந்தான், நன்னெஞ்சே கள்ளேற்றான் கொன்றை கடிது. | | 11 |
'சொல்லி' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. பதிஆய - தலைவர் ஆகிய அம் மான் ஆர் கையார் - (தாருகாவன முனிவர்கள் விடுத்த) அந்த மான்பொருந்திய கையை உடையவர். அகரம், பண்டறி சுட்டு.'அம் - அழகு' என்றலும் ஆம்.. அஃதே கொல்அத்தன்மையது தானோ! அம்மானார் - யாவரினும்பெரியோரயினார். கையார் - ஒழுக்கம் உடையார்''வளை கவர்ந்தார். அம்மானார், கையார் அறம்அஃதேதொல்' என முடிக்க. இதுவும் கைக்கிளைப்பாற்பட்ட தலைவி ஒருத்தியது கூற்று. 566.குறிப்புரை: அறம் ஆனநோக்காது - தனக்கு அறமாவனவற்றை எண்ணாமல்,('இரக்கம் இல்லாமல்' என்றபடி. இதுவும்பழித்ததுபோல் புகழ் புலப்படுத்தியது) அநங்கன் -மன்மதன். 'மா நஞ்சு அற உண்ட அமுதன்' எனமாற்றிக்கொள்க. அற - முற்றிலும் அறல் மானும்ஓதியாள் - கருமணல் போலும் கூந்தலை உடையவள்; உமை.'அறமான' என்பது பாடம் அன்று. அமர்ந்தான் -விரும்பினான். புகழே ஓதி - புகழையே சொல்லி. 'ஒளிதோற்றேன்' என மாற்றி, 'அழகினை இழந்தேன்' எனஉரைக்க. இதுவும் கைக்கிளைப் பாற்பட்ட தலைவிஒருத்தியது கூற்று. 567.குறிப்புரை: கோடற்குஒளியான் - கொள்ளுதலுக்குப் பின்னிடாதவன்."ஒளியாயகள்" என்பதில் கள், விகுதிமேல்விகுதி. 'ஒளியானவைகள்' என்றபடி - இங்கு ஒளி - புகழ்.'உலகம் ஏத்துதற்கு உரிய புகழ்கள் பலவற்றையும்ஏற்றவன்' என்க. இரண்டிடத்தும் "கொன்றை"என்பது கொன்றை மாலையையே குறித்தது. காப்புஇகழ்ந்தான் - என்னை இறவாமல் காத்தலைக்கைவிட்டான். இதன்பின் 'ஆயினும்' என்பது வருவிக்க.'தான் கொன்றையைக் கடிது ஈயக் கள்ளேல்' எனஇயைத்து முடிக்க. 'ஈய' என்பது சொல்லெச்சம்கள்ளேல் - (என்னால் இயலாது' என்று சொல்லிக்) கரவுசெய்யாதே. 'விரைந்து சென்று இரந்து வாங்கி வா'என்றபடி. இப்பாட்டின் துறையும் முன்பாட்டின் துறையே.
|