568. | கடியரவர், அக்கர், இனிதாடு கோயில் கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவ ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே, அஞ்சல்நீ ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம். | | 12 |
569. | யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட யாமானங் கொண்டங் கலர்தந்தார்? - யாமாவா ஆவூரா ஊரும் அழகா அனலாடி, ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான். | | 13 |
568.குறிப்புரை: கடி அரவர் -கடிக்கும் குணத்தையுடைய பாம்பை அணிந்தவர்.அக்கர் - எலும்பை அணிந்தவர். ஆடு கோயில் கடியர் -ஆடுமிடத்தைக் கடிதாக (சுடுகாடாக)க் கொண்டவர்.'கடிய கோயிலார்' எனற்பாலது, இடத்தின் தன்மையைஇடத்து நிகழ்பொருள்மேல் ஏற்றி, "கடியர்"எனப்பட்டது. "கையதும்" என்னும் உம்மை, 'அதுவுமகடிது" என இறந்தது தழுவிற்று. காடி அரவ ஆன் ஏறு -கடுமையான குரல் ஓசையை உடைய இடபம், 'கடியரவர்ஆனேறு' என்பது பாடம் அன்று. ஆன் ஏற்றார்க்குஆட்பட்டோம். அவ்விடத்துத் தகுதி வாய்ந்ததலைவர்க்கே ஆட்பட்டோம். ஈற்றடி, அஞ்சவேண்டாமைக்குக் காரணத்தை விளக்கிற்று. ஆன் -அவ்விடம். அஃது, "ஆன்வந்தியையும் வினைநிலையானும்" என்னும் தொல்காப்பியத்தாலும்1 அறியப்படும். 'அவ்விடம்' என்பது. ஆட்பட்டநிலையைக் குறித்தது. ஏற்றான் - ஏற்றவன்;ஏற்புடையவன். இதனால், பிறரெல்லாம் ஏற்புடையர்ஆகாமையும் குறிக்கப்பட்டதாம். 569.குறிப்புரை: யாம் மானம்நோக்காது - நாம் நாணத்தைப் பொருட்படுத்தாமல்,யா மானம் கொண்டு அங்கு யா மாவா ஆவூரா ஊரும் அழகாஅனலாடி அலர் தந்தார் - என்ன பெருமை பற்றிஅவ்விடத்து எந்த வகைக் குதிரையாகவோ இடபத்தைஊர்பவரும், அழகாகத் தீயில் ஆடுபவரும் ஆகியபெருமான் (கொன்றை மாலையைத் தாராமல்) பழிச்சொல்லையே தந்தார்? ஆ - ஐயோ! 'யான்(அலர்தூற்றும்) ஊரார்க்கு என் உரைப்பேன்' என்க."ஆடி" என்பது பன்மை யொருமை மயக்கம் அன்றி,'தந்தான்' என்றே பாடம் ஓதலுமாம்.'என்னுரைக்கோம் யாம்' என்பது பாடம் ஆகாமையறிக.மூன்றாம் அடியில், "ஊரா" என்றது, 'ஊர்தியாக'என்றபடி. இதுவும் காதற்பட்ட தலைவி கூற்று.
1. வினையியல் - 25.
|